ETV Bharat / city

கஇந்திய மக்களிடமிருந்து மத்திய அரசு தனிமைப்பட்டுவிட்டது!

author img

By

Published : Dec 28, 2019, 4:38 PM IST

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்திய மக்களிடமிருந்து மத்திய அரசு தனிமைப்பட்டுவிட்டது என தமிழக மஸ்ஜித் ஜமாத்தின் தலைவர் முகமது பஷீர் தெரிவித்துள்ளார்.

protest
protest

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடிகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மஸ்ஜித் ஜமாத்தின் தலைவர் முகமது பஷீர், ”இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்கில்தான் இந்தக் குடியுரிமைக் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். ஆனால், இந்தச் சட்டத்தை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே தனிமைப்பட்டுவிட்டனர். இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை இந்தப் போராட்டம் தொடரும் “ எனக் கூறினார்.

’குடியுரிமைச் சட்டத்தால் இந்திய மக்களிடமிருந்து மத்திய அரசு தனிமைப்பட்டுவிட்டது’ - போராட்டக்காரர்கள்

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி!

Intro:குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பாடிவீடு சட்டத்தை எதிர்த்து தேசியக் கொடியை ஏந்தி 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


Body:குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜமாத் அமைப்பின் கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் கலந்து கொண்டார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடிகளை ஏந்தி கோஷங்களை முழக்கமிட்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மஸ்ஜித் ஜமாத் களின் ஐக்கிய அமைப்பு தலைவர் முகமது பஷீர் கூறும்போது

இஸ்லாமியர்களை தனிமைப் படுத்தும் நோக்கில் தான் இந்த குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளனர் ஆனால் இந்த சட்டத்தை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அனைத்து இந்திய அரசியல் கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து அதன் மூலம் அவர்கள் தனிமைப்பட்டு விட்டனர் இந்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என கூறினார்


Conclusion:குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பாடிவீடு சட்டத்தை எதிர்த்து தேசியக் கொடியை ஏந்தி 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.