ETV Bharat / city

2ம் தவணை தடுப்பூசி கட்டாயம்!

author img

By

Published : Feb 13, 2021, 1:59 PM IST

சென்னை: முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் முடிந்தவர்கள் தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

ias
ias

தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டாம் தவணையாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில், அம்மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், சுகாதாரத்துறை செயலாளர் முன்னிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "ஜனவரி 16ம் தேதி முதல் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அன்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 ஆயிரம் பேருக்கு இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாள் முடிவடைந்தவர்கள் அனைவரும், 2ம் தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 30,345 பேர் சென்னையிலும்,15,906 பேர் கோவையிலும், 10,506 பேர் மதுரையிலும், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களிலும் அதிகபட்சமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும். இந்த சமயத்தில் ஆங்காங்கே டெங்கு பரவும் சூழலும் உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருந்து அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.