ETV Bharat / business

பாகிஸ்தானில் பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 % சூப்பர் வரி - பிரதமர் ஷெரீப் அறிவிப்பு

author img

By

Published : Jun 25, 2022, 11:21 AM IST

பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 விழுக்காடு சூப்பர் வரி விதி விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்
பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்(பாகிஸ்தான்): பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் அந்நாட்டின் 2022-23 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் குறித்து நேற்று (ஜூன்24) நடைபெற்ற பொருளாதாரக் குழுவின் கூட்டத்தில் அந்நாட்டில் 10 % சூப்பர் வரி விதி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் உள்ள அந்நாட்டை திவால் ஆவதைத் தடுக்கும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டத்தில் சிமெண்ட், எஃகு, ஆட்டோமொபைல் போன்ற பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 % சூப்பர் வரி விதி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், நாட்டில் நிலவும் சுழல் பணவீக்கம் மற்றும் பண நெருக்கடியை சமாளிக்கலாம் என்று விளக்கியுள்ளார்.

குறிப்பாக சிமெண்ட், ஸ்டீல், சர்க்கரை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உரங்கள், எல்என்ஜி டெர்மினல்கள், ஜவுளி, வங்கி, ஆட்டோமொபைல், சிகரெட், பானங்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்த சூப்பர் வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றில் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பிற நோக்கங்கள் அடங்கும் என்றார்.

"நாட்டில் வெகுஜனங்களுக்கு நிவாரணம் வழங்குவதும், மக்கள் மீதான பணவீக்கத்தின் சுமையை குறைத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்வதும் அரசின் முதல் நோக்கம் என்றும் நாட்டை திவாலாகாமல் பாதுகாப்பதே எங்களின் இரண்டாவது நோக்கம் என்றும் பிரதமர் ஷெரீப் வீடியோ ஒனறையும் வெளியிட்டுள்ளார். அதில், முந்தைய இம்ரான் கான் தலைமையிலான அரசின் "திறமையின்மை மற்றும் ஊழல்" காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இக்கட்டான காலங்களில் எப்போதும் ஏழை மக்கள்தான் தியாகங்களைச் செய்வார்கள். இன்று, வசதியான குடிமக்களும் தங்கள் பங்கிற்கு தன்னலமற்ற தன்மையைக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வரி வசூலிப்பதையே தொழிலாகக் கொண்ட நிறுவனங்கள் பணக்காரர்களிடம் இருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த 10 % சூப்பர் வரி விதிப்பின் மூலம், ஆண்டு வருமானம் ரூ.150 மில்லியனுக்கு மேல் உள்ளவர்களுக்கு 1 % வரி; ரூ.200 மில்லியனுக்கு, 2 % வரி; ரூ.250 மில்லியன் 3 % வரி; மேலும் ரூ.300 மில்லியன் அவர்களின் வருமானத்தில் 4 % வரி விதிக்கப்படும் என்றார். வரும் ஜூலை 1 முதல் அடுத்த நிதியாண்டில் பாகிஸ்தானின் ரூ.7 டிரில்லியனில் இருந்து ரூ.7.4 டிரில்லியனாக வரி வசூல் அதிகரிக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு வரி வசூலிக்க இதற்கான குழுக்கள் அமைக்கப்படும் என்று ஷெரீப் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரிசாவில் விண்ணில் பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.