ETV Bharat / business

தங்கம் விலை ரூ.575 ஏற்றம்: வெள்ளி ரூ.1227!

author img

By

Published : Jan 21, 2021, 6:22 PM IST

உலக சந்தையில் உலோக தங்கத்தின் விலையும், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஆபரண தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Gold price, Silver prices, Precious metals price, Gold price rise, gold price today, gold rate today, silver price today, silver rate today, தங்கம் விலை, வெள்ளி விலை, இன்றைய தங்கத்தின் விலை, இன்றைய வெள்ளியின் விலை, ஆபரண தங்கத்தின் விலை, business news in tamil, latest business news, tamil business news
தங்கம் வெள்ளி விலை

டெல்லி: உலோக தங்கத்தின் விலை இன்றைய வர்த்தகத்தில் 575 ரூபாய் உயர்ந்து , 10 கிராமிற்கு ரூ. 49,125ஆக இருந்தது.

முந்தைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.48,550ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ரூ.575 உயர்ந்து ரூ.49,125ஆக இருந்தது. அதேபோல, வெள்ளியின் விலை முந்தைய வர்த்தகத்தில் ரூ.65,472ஆக இருந்த நிலையில், ரூ.1,227 உயர்ந்து ரூ.66,999ஆக இருந்தது.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,400ஆக இருந்தது. காலையில், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்த நிலையில், மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 1100 ரூபாய் அதிகரித்து, ரூ.72,400ஆக இருந்தது. தங்கம் வெள்ளியின் விலையேற்றம் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.