ETV Bharat / business

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 90% வரை நகைக்கடன்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

author img

By

Published : Aug 6, 2020, 4:37 PM IST

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று(ஆகஸ்ட் 6) செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், 4 விழுக்காடு அளவிலேயே நீடிக்கும் என்று கூறியவர், தங்கத்தின் நகைக்கடன் 90 விழுக்காடு வரை பெறலாம் என்று கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

மும்பை: இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 6) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசியதை சுருக்கமாக காணலாம்.

repo rate
ரெப்போ வட்டி விகிதம்
  • 2020 முதல் பாதியில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன.
  • கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் குறைந்துள்ளன
  • பொருளாதார நடவடிக்கைகள் மீண்ட நேரத்தில், ஊரடங்கு விதிக்கப்படுவதால் மீண்டும் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
  • ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.

தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் சீன செயலிகள்: எம்.ஐ ப்ரவுசர், பெய்டூ உடன் 47 செயலிகளுக்கு தடை!

  • ஒட்டுமொத்தமாக, 2020-21ஆம் ஆண்டில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு கடன் அவசியம்.
  • நபார்டு வங்கிக்கு ரெப்போ விகிதத்தில் ரூ.10,000 கோடி கூடுதல் நிதி வழங்கப்படும்.
  • கரோனா காலம் என்பதால் 75 விழுக்காடு இருந்த தங்க நகைக்கடன் வரம்பு 90 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 4 விழுக்காடாகவே இருக்கும்.

என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.