ETV Bharat / business

மார்ச் 2021இல் வாராக்கடன் அளவு உயர்ந்து, 12.5 விழுக்காடாக இருக்கும் - ரிசர்வ் வங்கி

author img

By

Published : Jul 25, 2020, 9:00 AM IST

ரிசர்வ் வங்கி வெளியிட்ட நீதித்துறை ஸ்திர நிலை அறிக்கையில் வங்கிகளின் வாராக்கடன் உயர்ந்து வருவதாகவும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாத அளவில் வாராக்கடன் 4 விழுக்காடு உயர்ந்து 12.5 விழுக்காடாக உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி செய்தி
ரிசர்வ் வங்கி செய்தி

மும்பை: 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் வங்கிகளின் வாராக்கடன் அளவு 8.5 விழுக்காடாக இருந்தது. இந்த அளவு தற்போது உயர்ந்து வருகிறது. இப்பொழுது உள்ள மதிப்பீடுகளின்படி இந்த அளவு 4 விழுக்காடு உயர்ந்து 12.5 விழுக்காடாக உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக உயர்ந்த அளவு நெருக்கடி ஏற்பட்ட வங்கிகளின் வாராக்கடன் அளவு 14.7 விழுக்காடாகவும் உயர வாய்ப்பு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வெளியிடப்பட்ட நீதித்துறை ஸ்திர நிலை அறிக்கை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார்.

கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்!

அதில், தற்போதுள்ள நிதி நிலைமையில் வங்கிகள், இடை நிலையில் உள்ள நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களுடைய மூலதன அளவை உயர்த்த வேண்டும். சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்றும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் கூறினார்.

சரக்குகள் செல்லும் பாதையை சீராக கணிக்க, பெட்டிகளில் ஆர்.எஃப் அடையாள குறிச்சொற்கள்!

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்திய நிதி அமைப்பு முறை சீராக உள்ளது. எனவே எந்தக் கவலைக்கும் இடமில்லை. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தை மட்டும் அதிகரித்துக் கொள்வது அவசியமாகும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.