ETV Bharat / business

டிக்டாக் மீது வைத்த குறி தப்பாது - ஏலத்தில் எடுக்க கைகோர்க்கும் அமெரிக்க நிறுவனங்கள்!

author img

By

Published : Aug 28, 2020, 2:38 PM IST

வாஷிங்டன்: டிக்டாக் செயலியை ஏலத்தில் எடுப்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்க்க முடிவு செய்துள்ளது.

டிக்டாக் தடை
டிக்டாக் தடை

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு இந்தியா தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் 90 நாட்களில் டிக் டாக்கை தடை செய்யப்போவதாக அறிவித்தது. தொடர்ந்து மைக்ரோசாஃப்ட், இந்நிறுவனத்தை வாங்குவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதனுடன் வால்மார்ட் நிறுவனமும் இணைந்து டிக்டாக் ஏலத்தில் பங்குபெற போவதாக அறிவித்துள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் டிக்-டாக் செயலியின் உரிமையை வாங்க உலக பெரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன.

குறிப்பாக உலகின் முதல் பணக்கார நிறுவனமான அமேசானை பின்னுக்குத் தள்ளும் முனைப்பில், டிக் டாக் செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. டிக்டாக் செயலியை இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்நிறுவனங்கள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமின்றி, அமேசானை பின்னுக்குத் தள்ளும் வகையில் புதிய ஓடிடி தளம் ஒன்றையும் வால்மார்ட் நிறுவனம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஓடிடி தளத்திற்கு வால்மார்ட்+ எனப் பெயர் சூட்டப்படவுள்ளதாகவும், அதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள், திரைப்படங்களை காணும் வசதிகள் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.