ETV Bharat / business

புதிய வடிவம் எடுத்த டி.பி.எஸ். வங்கிக்கு ரூ.2,500 கோடி மூலதனம்!

author img

By

Published : Dec 4, 2020, 7:16 PM IST

புதிதாக உருவெடுத்துள்ள டி.பி.எஸ். இந்தியா வங்கிக்கு சுமார் ரூ.2,500 கோடி மூலதனத்தை அந்த வங்கியின் தலைமை அளித்துள்ளது.

DBS
DBS

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்த தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி கடந்த நவம்பர் 27ஆம் தேதி சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து டி.பி.எஸ். இந்தியா லிமிடெட் என்ற பெயரில் இந்த வங்கி புதுவடிவம் பெற்று செயல்பட்டுவருகிறது.

புதிய வங்கியின் சிறப்பான செயல்பாட்டிற்காக சிங்கப்பூரில் உள்ள தலைமையகம், சுமார் ரூ.2,500 கோடி தற்போது மூலதனத்தை அளித்துள்ளது. இதன்மூலம் வங்கியின் ஸ்திரத்தன்மை வலுப்பெற்று வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மேம்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு நடவடிக்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் விரைவில் முழுச் சேவையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் டி.பி.எஸ். வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. டி.பி.எஸ். வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை 1994ஆம் ஆண்டு மும்பை நகரில் தொடங்கியது.

இதையும் படிங்க: மும்பையில் பிரமாண்டமாக களமிறங்கும் இந்தியாவின் 2ஆவது ஐகியா கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.