ETV Bharat / business

நவம்பரில் களைகட்டிய பண்டிகைக் கால வாகன விற்பனை!

author img

By

Published : Dec 1, 2020, 10:52 PM IST

நவம்பர் மாத காலக்கட்டத்தில் டோயோட்டா, பஜாஜ், மாருதி ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பான உயர்வைக் கண்டுள்ளது.

auto sales
auto sales

நவம்பர் மாத காலகட்டத்தின் வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கோவிட்-19 காரணமாக முடங்கியிருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போதைய பண்டிகைக் காலத்தில் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது.

நவராத்திரி, தீபாவளி என கடந்த நவம்பர் மாதத்தில் வந்த பண்டிகைகளை அடுத்து, வாகன விற்பனையும் சிறப்பான ஏற்றத்தைக் கண்டுள்ளது. நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், நவம்பர் மாத காலத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 223 வாகனங்களை விற்றுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 1.7 விழுக்காடு அதிகமாகும்.

அத்துடன் மாருதி வாகன ஏற்றுமதியானது கடந்த அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் சுமார் 30 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது. அத்துடன் நவம்பர் மாதத்தில் டோயோட்டா நிறுவனம் தனது வாகன விற்பனையை 2.4 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

அதேபோல், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நவம்பர் மாத விற்பனையில் ஐந்து விழுக்காடு உயர்வைக் கண்டு, 4.22 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹிண்துஜா நிறுவனமும் ஐந்து விழுக்காடு உயர்வுடன் 10 ஆயிரத்து 659 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதையும் படிங்க: வர்த்தகர்களுக்கு வங்கிகள்தான் வில்லன்: CAIT அமைப்பு குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.