ETV Bharat / business

வாகன ஏற்றுமதியில் 13% உயர்வு: வெளிநாட்டுச் சந்தையில் தூள்கிளப்பும் பஜாஜ் ஆட்டோ!

author img

By

Published : Mar 1, 2021, 4:21 PM IST

வெளிநாட்டு வாகன ஏற்றுமதியில் சிறப்பான உயர்வுகண்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை ஆறு விழுக்காடு உயர்ந்துள்ளது.

Bajaj Auto
பஜாஜ் ஆட்டோ

பிப்ரவரி மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை முன்னணி நிறுவனமான பஜாஜ் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையானது கடந்தாண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் ஆறு விழுக்காடு அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் பஜாஜ் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை மூன்று லட்சத்து 54 ஆயிரத்து 913ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 17ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 563 இருசக்கர வாகனம் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டைக் காட்டிலும் 7 விழுக்காடு உயர்வாகும்.

அதேவேளை, பஜாஜ் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை இரண்டு விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்நிறுவனத்தின் வெளிநாட்டு வாகன ஏற்றுமதி, கடந்த பிப்ரவரி மாதத்தில் 13 விழுக்காடு ஏற்றம்கண்டதே ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு காரணம் என புள்ளிவிவரத்தில் தெரியவருகிறது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 166 வாகனங்களை பஜாஜ் ஏற்றுமதிசெய்த நிலையில், கடந்த மாதத்தில் அதை இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 206ஆக உயர்த்தியுள்ளதே அந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு காரணம்.

இதையும் படிங்க: ஜியோபோன் 2021 சலுகை: 2 ஆயிரத்திற்கு 2 ஆண்டுகள் இலவசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.