ETV Bharat / briefs

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எஸ்.பி.,

author img

By

Published : Aug 11, 2020, 8:09 PM IST

ஈரோடு: பொதுமக்கள், காவல்துறையினர் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வழங்கினார்.

S.P.Thangadurai Helping  tribal people In Erode
S.P.Thangadurai Helping tribal people In Erode

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள், காவல்துறையினர் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அந்தியூர் அருகே கிணத்தடி மலையடிவார கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு முகாம், மலைவாழ் மக்களுக்கு மளிகை, காய்கறி பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கலந்துகொண்டு 38 குடும்பங்களைச் சேர்ந்த 150 மலைவாழ் மக்களுக்கு ஐந்து கிலோ எடை கொண்ட காய்கறி தொகுப்பு, 25 பள்ளி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கினார்.

மேலும், அங்குள்ள முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இவ்விழாவில் காவல் துணை கண்காணிப்பாளர் பவானி, அந்தியூர் காவல் ஆய்வாளர் உள்பட காவல்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.