ETV Bharat / briefs

உரத்தின் விலை 58% உயர்வு: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Apr 22, 2021, 7:47 PM IST

சேலம்: உரம் விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Farmers and CPI protest
Farmers and CPI protest

விவசாயத்திற்குப் பயன்படுத்தும் உரத்தின் விலை 58 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில், உரம் விலையேற்றத்தைத் திரும்ப பெறவேண்டும், விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கிடைத்திட மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

உரத்தின் விலை 58% உயர்வு: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
உரத்தின் விலை 58% உயர்வு: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!armers and CPI protest
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.