ETV Bharat / briefs

விமானத்தில் கரோனா நோயாளி: தாமதமாக புறப்பட்ட விமானம்

author img

By

Published : Apr 22, 2021, 4:40 PM IST

சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்ல தயாரான விமானத்தில் கரோனா நோயாளி கண்டறியப்பட்டதால், விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

Corona Patient Find In Hyderabad Flight
Corona Patient Find In Hyderabad Flight

சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று (ஏப். 20) காலை 10 மணிக்கு 85 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது.

அதில் பயணம் செய்ய இருந்த ஹைதராபாத்தைச் சோ்ந்த ஆண் பயணி ஒருவா் இருமல், சளி தொல்லையால் அவதிப்பட்டார்.

இதனால் சந்தேகமடைந்த சகபயணிகள், விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனா். உடனடியாக விமான பணிப்பெண்கள் அந்த பயணியை விசாரித்தனா். அதோடு அவரிடம் உள்ள கரோனா பரிசோதனை சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தனா். அதில் அவருக்கு கரோனா பாசிடிவ் என்பது தெரியவந்தது.

Corona Patient Find In Hyderabad Flight
Corona Patient Find In Hyderabad Flight
இதனால் அதிா்ச்சியடைந்த விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனா். இதனையடுத்து விமானம் புறப்படவில்லை. விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். அதோடு சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் கரோனா நோயாளி: தாமதமாக புறப்பட்ட விமானம்
தொடர்ந்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமானநிலைய அலுவலர்கள், சுகாதாரத்துறையினா் விரைந்து சென்று கரோனா பாதிப்பிற்குள்ளான பயணியை அவசரமாக விமானத்தை விட்டு கீழே இறக்கினா். அவருக்கு கவச பாதுகாப்பு உடை அணிவித்து ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா்.இதற்கிடையே, விமானத்திலிருந்த சக பயணிகள், விமான ஊழியா்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். பின்னர் 84 பயணிகள், விமான ஊழியா்கள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமானம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.அதேபோல் பயணிகள் அனைவரும் கிருமிநாசினியைக் கொண்டு தங்களது கைகளை சுத்தப்படுத்தி கொண்டனா்.அதன்பின், விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டு காலை 11.30 மணிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையும் படிங்க: வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் சிசிடிவி வேண்டும் - செந்தில் பாலாஜி கோரிக்கை!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.