ETV Bharat / bharat

Zoho : இஸ்ரேல்-ஆசியா வணிக நிறுவனத்துடன் சோகோ ஒப்பந்தம்.. இஸ்ரேல் மார்க்கெட்டில் கால் பதிக்கும் சோகோ!

author img

By

Published : Jun 20, 2023, 9:47 PM IST

இஸ்ரேல் நிறுவனங்களுக்கு வணிகம் சார்ந்த சேவை ஆப்களை வழங்கும் வகையில் இஸ்ரேல் - ஆசியா இடையிலான வர்த்தக கூட்டமைப்புடன் ஒப்பந்தம் போட்டு உள்ளதாக சோகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Zoho
Zoho

சென்னை : இஸ்ரேல் - ஆசியா இடையிலான வர்த்தக கூட்டமைப்புடன், பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் போட்டு உள்ளதாக சோகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் - ஆசியா நாடுகளுக்கு இடையே வணிகம் மற்றும் வர்த்தக போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேல் - ஆசியா சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்புடன் வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு உள்ளதாக சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சோகோ தெரிவித்து உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேல்-ஆசியா சேம்பர் ஆப் காமர்ஸ் உடன் கூட்டணியில் உள்ள நிறுவனங்களுக்கு 55-க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வணிக ஆப் சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் துபாயில் உள்ள இஸ்ரேலின் துணைத் தூதரகத்தில் வைத்து கையெழுத்தானதாக சோசோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதன் மூலம் இஸ்ரேல் - ஆசியா சேம்பர் ஆப் காமர்சுடன் கூட்டணியில் உள்ள நிறுவனங்களுக்கு வணிக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க உதவியாக இருக்கும் என சோகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பேசிய சோகோ மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய மேலாளர் பிரேமானந்த் வேலுமணி, "துபாயில் உள்ள இஸ்ரேல் நாட்டின் துணைத் தூதரகம் மற்றும் இஸ்ரேல்-ஆசியா வர்த்தக சம்மேளனத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இதையும் படிங்க : மணிப்பூர் கலவரம்.. நடவடிக்கை என்ன? பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்!

இஸ்ரேலிய வணிக சுற்றுச்சூழல் அமைப்பில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம். மத்திய கிழக்கு நாடுகளில் சோகோ நிறுவனத்தின் அதிக நன்மதிப்புகளை கொண்ட ஒரு நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் இருப்பதாகவும், அந்நாட்டின் உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்ய சோகோ நிறுவனம் கடமைப்பட்டு உள்ளதாகவும்" அவர் கூறினார்.

இது குறித்து இஸ்ரேல் - ஆசிய வர்த்தக அமைப்பின் தலைவர் அனாட் பெர்ன்ஸ்டீன் ரீச் கூறுகையில், "இஸ்ரேலும், இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக சுற்றுச்சூழல் மூலம் வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் இஸ்ரேலிய சந்தையில் நுழைவதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சரியான நேரம் என்றார்.

மேலும் சோகோ, இந்தியாவின் முன்னணி பிராண்டாக இருப்பதால், இந்த மதிப்புமிக்க கூட்டணிகள் மற்றும் எங்கள் உறுப்பினர்களுக்கான நுழைவாயில் வாய்ப்புகளை வளர்ப்பதில் முன்னணியில் உள்ளது. சோகோ இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் மகிழ்ச்சி அடைவதாக" அவர் கூறினார்.

இதையும் படிங்க : எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.