ETV Bharat / bharat

சமோசா விற்கும் இன்ஜினியர்.. அதிலும் புதுமை புகுத்தி நல்ல வருவாய்!

author img

By

Published : Jan 27, 2023, 10:09 PM IST

உத்தரப்பிரதேசத்தில் இன்ஜினியர் வேலையினை வெறுத்து சமோசா கடை ஆரம்பித்த இளைஞர், தன் கடை சமோசாக்களுக்கு மெக்கானிக்கல் சமோசா, ஐடி சமோசா என பெயர் அச்சிட்டு விற்கும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமோசா
சமோசா

கான்பூர்: நான்கு துண்டு உருளைக் கிழங்குகளை எண்ணையில் வறுத்து, கண்கவர் பிளாஸ்டிக் பாக்கெட்டில் சிறிது காற்று அடித்து, விற்று கொள்ளை லாபத்தை உணவுப்பொருள் விற்பனை நிறுவனங்கள் பார்த்து வருகின்றன. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வியாபார யுக்தியை திறம்பட கையாளும்போது வியாபாரிக்கு பணம் கொழிக்கத் தான் செய்கிறது.

கோடி ரூபாய் காரோ, 50 பைசா மிட்டாயோ, வியாபார யுக்தி மூலம் வாடிக்கையாளர் மனதில் அதன் பெயரை பதியவைத்துவிட்டால் அதன்பின் வியாபாரிக்கு பண அறுவடை செய்யும் வேலை மட்டும்தான். அந்த வகையில், எப்போதும் விற்கும் சமோசாவில் சிறு மாற்றங்களைச் செய்து இன்ஜினியர் ஒருவர் கல்லாகட்டி வருகிறார்.

கான்பூரைச் சேர்ந்த இன்ஜியனரான அபிஷேக், தன் பொறியியல் தொழிலை கைவிட்டுவிட்டு தற்போது சமோசா விற்பனை செய்து வருகிறார். எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் வந்த இடத்தை மறக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட அபிஷேக், தான் விற்கும் சமோசாக்களில் பொறியியல் படிப்பு மற்றும் உணவுப்பொருட்களின் பெயர்களை அச்சிட்டு விற்கத்தொடங்கி உள்ளார்.

குறிப்பாக பொறியியல் படிப்புகளான மெக்கானிக்கல் சமோசா, ஐடி சமோசா, எலக்ட்ரிக்கல் சமோசா மற்றும் பீசா, பாஸ்தா எனப் பல்வேறு பெயர்களை அச்சிட்டு விற்கத் தொடங்கினார். அபிஷேக்கின் இந்த தனித்துவம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாள்தோறும் அபிஷேக்கின் கடையில் இன்ஜினியர் சமோசாக்களை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ராகுல் யாத்திரையில் மீண்டும் பாதுகாப்பு குளறுபடி.. பாதுகாவலர்கள் திரும்பப்பெறப்பட்டதாக புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.