ETV Bharat / bharat

டெல்லியில் 6 மாவட்டங்களுக்கு பெண் காவல் துணை ஆணையர்கள் நியமனம்

author img

By

Published : Sep 27, 2021, 10:01 AM IST

டெல்லியில் முதன்முறையாக 15 மாவட்டங்களில், ஆறு மாவட்டங்களுக்கு மகளிர் துணை ஆணையர்கள் தலைமை தாங்கவுள்ளனர். இதில் மூன்று பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் முதல் முறையாகச் சிறப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஆறு மாவட்டங்களுக்கு பெண் டி.சி.பிக்கள் நியமனம்!
டெல்லியில் ஆறு மாவட்டங்களுக்கு பெண் டி.சி.பிக்கள் நியமனம்!

காவல் துறையில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வைக் கொண்டுவருவதற்காக, காவல் துணை ஆணையர் நிலையில் உள்ள 11 மூத்த ஐபிஎஸ் அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டார்.

அதன்படி, சனிக்கிழமையன்று, 2010ஆம் ஆண்டு பயிற்சி முடித்த பெண் ஐபிஎஸ் அலுவலர்களான தென் மாவட்ட பெனிடா மேரி, மத்திய மாவட்ட ஸ்வேதா சவுகான், தென்கிழக்கு மாவட்ட இஷா பாண்டே ஆகிய காவல் துணை ஆணையர்களுக்கு மாவட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண் அலுவலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆணையர்

முன்னதாக முன்னாள் டெல்லி ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா, தலைநகரில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு பெண் காவல் துணை ஆணையர்களைத் தேர்ந்தெடுத்தார். இதில் மேற்கு மாவட்ட ஊர்விஜா கோயல், வடமேற்கு மாவட்ட உஷா ரங்நானி, கிழக்கு மாவட்ட பிரியங்கா காஷ்யப் ஆகிய காவல் துணை ஆணையர்கள் அடங்குவர்.

டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா, பெண் அலுவலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பெண் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களை (SHO) நியமிக்க முடிவுசெய்து, ஒரு பெண் அலுவலருக்கு காவல் நிலைய பொறுப்பையும் வழங்கினார்.

மூன்று ஐபிஎஸ் அலுவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கு 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் பயிற்சியை நிறைவுசெய்த ஜஸ்மீத் சிங், ராஜிவ் ரஞ்சன், பாயிண்டட் பிரதாப் சிங் ஆகியோர் தலைமை தாங்குவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.