ETV Bharat / bharat

கார்ட்டூன் பார்ப்பதை கண்டித்த தாய்.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு..

author img

By

Published : Feb 7, 2023, 4:08 PM IST

உத்தரப் பிரதேசத்தில் கார்ட்டூன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூன் பார்ப்பதை கண்டித்த தாய்
கார்ட்டூன் பார்ப்பதை கண்டித்த தாய்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் சதத்கஞ்ச் பகுதியில் கார்ட்டூன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 15 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் திவாரி-ரூமிகா தம்பதிக்கு ஆயுஷ்மான்(15) மற்றும் அன்ஷுமான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் திவாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன்பின் ரூமிகா மகன்களை கவனித்துவந்தார். இந்த நிலையில் நேற்றிரவு (பிப்.6) ஆயுஷ்மான்(15) டிவியில் கார்ட்டூன் பார்த்துள்ளார். அப்போது சகோதரர் அன்ஷுமான் வேறு சேனல் மாற்றுமாறு கேட்டுள்ளார். ஆனால், ஆயுஷ்மான் மாற்றவில்லை.

இதனால் இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது, ஆயுஷ்மானை அன்ஷுமான் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த தாய் ரூமிகா அவர்களை சமாதானம் செய்யாமல், ஆயுஷ்மானை தானும் 2 முறை அறைந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆயுஷ்மான் அறைக்குள் புகுந்து கொண்டு கதவை தாழ்ட்டுக்கொண்டார்.

கோபம் தணிந்த உடன் மகன் வெளியே வருவான் என்று ரூமிகா கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ரூமிகா, ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஆயுஷ்மான் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இவரது கூச்சல் சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து, கதைவை உடைத்து சிறுவனின் உடலை மீட்டனர். அதன்பின் சதத்கஞ்ச் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை தொடங்கியது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் 'அதானி' பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.