ETV Bharat / bharat

பெகாசஸ் வாடிக்கையாளர் யார்- ப.சி. கிடுக்கிப்பிடி!

author img

By

Published : Jul 27, 2021, 8:37 AM IST

இந்தியர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் யார் அந்த இந்திய வாடிக்கையாளர் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிடுக்கிப்பிடி கேள்வியெழுப்பியுள்ளார்.

who was the Indian Client- P Chidambaram
who was the Indian Client- P Chidambaram

டெல்லி : நரேந்திர மோடி அமைச்சரவையின் ஒன்றிய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என 300 பேர் வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனமான பெகாசஸ் இந்தச் செயலில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்கிவருகின்றனர்.

  • Was it the government of India? Was it an agency of the government? Was it a private entity?

    I am certain the client’s name will be revealed soon. Until then, I suppose the government will brazen out the allegations of snooping

    — P. Chidambaram (@PChidambaram_IN) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில், “சர்வதேச ஊடகவியலாளர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தி வயர் ஆங்கில இணையதளம் இந்திய வாடிக்கையாளர்கள் இருந்ததாக கூறியுள்ளது.

யார் அந்த இந்திய வாடிக்கையாளர்? இந்திய அரசாங்கமா? இந்திய அரசாங்கம் ஒரு வாடிக்கையாளராக இருந்ததா?

அல்லது தனியார் நிறுவனமா? அந்தத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன். அப்போது இந்த மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அரசாங்கம் வெட்கப்படும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒட்டுக்கேட்பது காங்கிரஸ் கலாசாரம்- பாஜக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.