ETV Bharat / bharat

ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் மாறுது.. அவசியம் படிங்க மக்களே!

author img

By

Published : Mar 31, 2023, 10:20 AM IST

2023 ஏப்ரல் 1(நாளை) முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில் பல்வேறு விதிமுறைகள் மாற்றம் அடைகிறது. அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: 2022 - 2023 நிதி ஆண்டு இன்றுடன்(மார்ச் 31) முடிவடைகிறது. புதிய நிதியாண்டில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. 01.04.2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதை நாம் கவனிக்காத பட்சத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை. அப்படி புதிய நிதியாண்டில் மாற்றம் காண உள்ள துறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பான் கார்டு - ஆதார் கார்டு இணைப்பு(Pan aadhaar link) - 31 மார்ச் 2023 க்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம். ஏப்ரல் 1, 2023 முதல், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பான் கார்டு செயலிழக்கப்படுவதால் வருமான வரி தாக்கல் செய்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். மேலும் அதிக வரியும் வசூலிக்கப்படும்.

தங்க நகை விற்பனை : ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஹால்மார்க் பிரத்யேக அடையாள எண் இல்லாமல் தங்க நகைகளை விற்பனை செய்யக் கூடாது என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. நுகர்வோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மார்ச் 31, 2023 க்குப் பிறகு, HUID ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று அரசு தெரிவித்து உள்ளது.

எரிபொருள்/எரிவாயு விலை : ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி, பெட்ரோல் - டீசல் மற்றும் எரிவாயுவின் விலை மாற்றம் ஏற்படும். சந்தைக்கு ஏற்ப எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. கடந்த 1 ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இந்த 1 ஆம் தேதி எரிபொருள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்கள் விலை உயர வாய்ப்பு: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பிஎஸ் 6 இரண்டாம் பாகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் கார்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், வரும் நிதி ஆண்டில் இருந்து தயாரிக்கப்படும் கார்களில் பிஎஸ் 6 இரண்டாம் பாகம் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதனால் காரிகளில் இருந்து வெளியேறும் அதிகபட்ச புகை அளவை அந்த கருவி கண்காணித்து ஓட்டுநருக்கு சரியான நேரத்தில் தகவல் கொடுக்கும். இந்த கருவிக்கு தேவையான சென்சார், செமி கண்டக்டர் உள்ளிட்ட கருவிகள் விலை அதிகம் என்பதால் இந்த கருவி பொருத்துவதன் காரணமாக காரின் விலையும் அதிகரிக்கக்கூடும். டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யு, டொயடா, ஆடி(Audi) உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையில் 50 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக விலை ஏற்றலாம் எனக் கூறப்படுகிறது.

காப்பீட்டு(insurance) பாலிசிகளுக்கு வரி : அதிக பிரீமியத்துடன் கூடிய காப்பீட்டு பாலிசிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற விதி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பிரீமியத்துடன் காப்பீட்டுத் திட்டம் கொண்டவர்கள் அதற்கு வரி செலுத்த வேண்டும் என் பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரம் முதலீடு மற்றும் காப்பீடு சார்ந்த திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நாமினி (nomination ) அவசியம்: மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களும் தங்கள் நியமனப் பணிகளை முடிக்குமாறு பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான (SEBI) உத்தரவிட்டு உள்ளது. நியமன பணிகளை தவறும் பட்சத்தில் ஏப்ரல் 1, 2023 முதல், முதலீட்டாளர்களின் முழு விவவரக் குறிப்புகள் முடக்கப்படும் என்றும் விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, மீண்டும் தொடங்கப்படும் என செபி தெரிவித்து உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அடையாள எண் கட்டாயம் : அரசு திட்டங்களின் மூலம் பயன் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஏப்ரல் 1 முதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை (யுடிஐடி) எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என தெரிக்கப்பட்டு உள்ளது. யுடிஐடி இல்லாதவர்கள், தங்களின் யுடிஐடி பதிவு எண் பற்றிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது. இந்த யுடிஐடி மூலம் மாற்றுத்திறனாளிகள் 17 அரசுத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ராமரின் பெயரில் கடன் - முன்னாள் பிரதமர் முதல் பாலிவுட் நடிகர் வரை வாடிக்கையாளர்களை கொண்ட விசித்திர வங்கி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.