ETV Bharat / bharat

டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5 வரையிலான வார ராசிபலன்!

author img

By

Published : Dec 1, 2021, 10:36 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசி பலன்களைக் காண்போம்.

டிசம்பர் மாத ராசி பலன்கள் , இந்த வார ராசிபலன்
இந்த வார ராசிபலன்

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு சில நல்ல செய்திகள் வரலாம். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த வாரம் உங்களுக்கு வேலை கிடைக்கலாம். வேலை செய்பவர்கள் நல்ல இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம். உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். நீங்கள் சில அழகான இடத்திற்கு சுற்றுலாப் பயணம் செல்லலாம், அதில் நீங்கள் மனமகிழ்ச்சி அடையலாம். நீங்கள் கடற்கரைக்கோ அல்லது ஆற்றங்கரைக்கோ செல்லலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடலாம். காதலர்களுக்கு நல்ல நேரமிது. தொழில் அதிபர்கள் வெளிநாட்டு தொழிலில் ஆதாயம் பெறலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவையும் நீங்கள் பெறலாம். புதிய நபர்களுடன் நட்பு கொள்ளலாம். விலையுயர்ந்த வாட்ச் அல்லது பிராண்டு ஆடைகளை வாங்குவதற்காக நீங்கள் பணத்தைச் செலவழிக்கலாம்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு மிதமான பயனுள்ள வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், உங்கள் உடல்நலத்தை பாதிக்கக்கூடிய ஒன்றைப்பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படலாம். எனவே, நீங்கள் உங்களின் பிற வேலைகளிலிருந்து விலகி இருங்கள். சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளுங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். திருமண வாழ்க்கையில் சில மன இறுக்கம் ஏற்படலாம், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையலாம். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். காதலர்கள் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் நீங்கள் அவற்றை தைரியமாக நிர்வகிப்பீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல நேரமிது. ஆனால் வாரத் தொடக்கத்தில் புதிதாக எதையும் தொடங்கக்கூடாது. வார நடுப்பகுதி அதற்கு ஏற்றது. வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்

இது உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்கள் திறமையை அதிகரிக்கும். உங்கள் வேலையில் நீங்கள் முழு கவனம் செலுத்துவீர்கள், மேலும் உங்கள் வேலை பிறரால் மிகவும் பாராட்டப்படும். போட்டியாளர்களால் உங்களுக்குத் தீங்கு செய்ய முடியாமல் போகலாம். அதற்கு மாறாக, நீங்கள் மறைமுகமாக அவர்களிடமிருந்து பயனடையலாம். திருமணமான தம்பதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இந்த வாரம் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்பீர்கள். காதலர்கள் தங்கள் உறவை நெருக்கமாக்கலாம். எனினும், சிலர் உங்கள் உறவைக் கண்டு மகிழ்ச்சியின்றி இருக்கலாம், மேலும் அவர்கள் உங்களுக்கு சவாலான செயல்களைச் செய்யலாம். தொழிலதிபர்களுக்கு, இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வேலையில் ஒரு புதிய சூத்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம், அதில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலைக்கேற்ற நல்ல பலன்களைப் பெறலாம், அதனால் அவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். இந்த வாரம் கல்வி விஷயங்களுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும்.

கடகம்

இந்த வாரம் உறவுகளின் முக்கியத்துவத்தை நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள். அர்த்தமுள்ளதும் பிரிக்க முடியாததுமான பிணைப்புக்கு ஆழமான அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணரலாம். வாரத் தொடக்கத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்காக பணம் செலவழிக்கலாம். மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடலாம். உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம். நடைமுறைக்கு சாத்தியமான கண்ணோட்டத்தில் இதைப் பற்றி நீங்கள் நினைத்தால், உங்களுக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும். மாணவர்கள் வாரத் தொடக்கத்தில் படிப்பில் ஆர்வம் கொள்ளலாம், இந்த வாரம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீங்கள் மன அழுத்தத்திலிருந்தும் பதட்டத்திலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள், இது உங்களுக்கு நிறைய கவலைகளை ஏற்படுத்தலாம். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல நேரமிது. தொழிலில் உங்கள் வாழ்க்கைத் துணை தலையிடுவது உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் நீங்கள் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் யாரையாவது நேசித்தீர்கள் என்றால், நீங்கள் நேசித்தவர்களும் உங்கள் மீது ஒருவித ஈர்ப்புடன் இருப்பார்கள். வருமானம் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள், செலவுகள் குறையும், இதன் காரணமாக நிதி நிலைமை வலுவாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு ஏதாவது குழப்பம் ஏற்படும். அதிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் தொழில் செய்கிறீர்கள் என்றால் அதில் வருமானம் அதிகரிக்கும் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களில் இருந்து நிறைய இலாபம் பெறலாம். இந்த வாரம் சட்டத் துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும்.

கன்னி

இந்த வாரத்தில் பல்வேறு வகையான சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். வாரம் தொடங்கும் போது, உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மகிழ்ச்சி பயணத்திற்கு செல்லலாம். இருப்பினும், வாரத்தின் மற்ற நாட்களில் நீங்கள் கொஞ்சம் சோர்வாக காணப்படலாம். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் குறைபாடுகளைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்யலாம் என்பதால் வேலை செய்பவர்கள் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டியிருக்கலாம். இந்த வாரம் தொழில் செய்யும் நபர்களுக்கு சாதாரணமாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைக் கொண்டிருக்கலாம். குடும்பத்தில் உள்ள சிறியவர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படலாம். நீங்கள் அவர்களை கவனித்து உதவ வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை பெறுவீர்கள். காதல் வாழ்க்கையை அனுபவிக்கலாம். வீட்டில் இருப்போருக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

துலாம்

இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வாரம் தொடங்கும் போது, குடும்ப பொறுப்புகளில் மிகவும் பிஸியாக இருக்கலாம் மற்றும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நிறைய நேரம் செலவிடலாம். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் வேலையின் வேகத்தை நீங்கள் முடுக்கிவிட்டு, நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். நல்ல ஆரோக்கியத்தை பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கும் காதலர்களுக்கும் இது ஒரு நல்ல நேரம். திருமணமான தம்பதிகளுக்கும் நல்ல வாழ்க்கையாக இருக்கும். உங்களை நம்பி, சிரமங்களை உறுதியாக எதிர்கொண்டு, உங்கள் வேலையை நீங்கள் தொடர வேண்டும்.

விருச்சிகம்

குடும்பத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவரின் திருமணம் உறுதி செய்யப்படலாம். முழு குடும்பமும் அதற்கான வேலைகளை செய்யத் தொடங்கலாம். நல்ல ஆரோக்கியத்தை பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மூலமாக உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். சிறிய பயணங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கலாம். புதிய நண்பர்களையும் உருவாக்கலாம். அவர்களுடன் நேரத்தை செலவழித்து நீங்கள் மகிழலாம். மூத்தவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். காதலிப்பவர்கள் தங்கள் காதலை காதலிப்பவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துவீர்கள். திருமணமானவர்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கலாம். எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட நீங்கள் அனுமதிக்கக்கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். எனவே, உங்கள் வங்கி இருப்பும் அதிகமாகும்.

தனுசு

இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கலாம், உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். செலவுகள் குறையும், இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தலாம். நீங்கள் வீட்டில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பலாம். இது உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே அதிக ஈர்ப்பும் பிணைப்பும் இருக்கலாம். காதலர்களுக்கு நல்ல நேரமிது. எனினும், நீங்கள் காதலிப்பவரின் உடல்நிலை பாதிக்கப்படலாம், எனவே உடல்நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டும். வேலை செய்பவர்கள் சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும். நீங்கள் சந்தையின் நாடித்துடிப்பைப் பிடித்து முன்னேறுவீர்கள் என்பதால் தொழிலதிபர்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்

இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாகும். நீங்கள் நல்ல தருணங்களை அனுபவிக்கலாம் மற்றும் வாழ்க்கையை நேசிக்கலாம். புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கலாம். உங்கள் உடல் நலம் மேம்படலாம். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும் எதிலும் கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். வேலை செய்பவர்கள் வேலைக்கேற்ற பலன்களை அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். காதலர்களுக்கு நல்ல நேரமிது. நீங்கள் காதலிப்பவரின் தனிப்பட்ட விவகாரங்களில் அதிகமாக தலையிடுவதை நிறுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கும் நல்ல நேரமிது. வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்

இது உங்களுக்கு ஒரு நல்ல வாரமாக இருக்கலாம். வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் வருவாய் அதிகரிக்கலாம் மற்றும் உங்கள் செலவுகளில் ஒரே நேரத்தில் குறைவு ஏற்படும், இது நிதி விஷயங்களில் உங்களை வலுப்படுத்தலாம். உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்துகொள்ளலாம். உங்கள் நிலுவையில் உள்ள திட்டங்கள் பலனளிக்கலாம். உங்களில் சிலர் வெளிநாடு செல்வதில் வெற்றி பெறலாம். மாணவர்கள் கல்வியில் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் அறிவு மிகவும் பாராட்டப்படும். வீட்டு வாழ்க்கையை வழிநடத்துபவர்கள் தங்கள் உறவில் அன்பையும் உடமையையும் அதிகரிக்கலாம். குடும்பத்தில் புதிய விருந்தினர் ஒருவர் உங்களுக்கு கிடைப்பார். இந்த வாரம் காதலர்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்கள் கலைத்திறமை நீங்கள் காதலிப்பவரை பெரிதும் கவரும். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரமிது. நீங்கள் எந்த வேலை செய்தாலும், அது வெற்றியில் முடியும். இது நீங்கள் யாரென்று மற்றவருக்கு புரியவைக்கும்.

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்கள் வேலையில் நீங்கள் முழு கவனம் செலுத்துவீர்கள், உங்கள் வேலையில் உள்ள குறைபாடுகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உங்கள் பணிகளை சரியான நேரத்தில் அதிசயமான முறையில் முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் சில நம்பிக்கைக்குரிய செய்திகளைப் பெறலாம். சமூக ஊடக பிரச்சாரங்களில் இருந்து நீங்கள் பெரிய லாபங்களைப் பெறலாம். வருவாய் சராசரியாக இருக்கும். செலவுகளும் சராசரியாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் வேலையில் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். சக ஊழியர்களிடமிருந்து சில புதிய விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். காதலர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்ளலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.