ETV Bharat / bharat

அடுத்த பிரதமர் யார்? - மவுனம் காக்கும் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், மல்லிகார்ஜூன கார்கே!

author img

By

Published : Apr 13, 2023, 7:13 AM IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Congress Meet
Congress Meet

டெல்லி : 2024 நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்ம், ஐக்கிய ஜனதாதளம் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக எல்லா எதிர்க் கட்சிகளையும் ஒன்று திரட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாஜக.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பது குறித்து உறுதி எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.

கூட்டத்தை தொடர்ந்து அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள உள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கூட்டாக அறிவித்தனர்.

பிரதமர் வேட்பாளர் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அனைவரும் சில நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தனர். தொடர்ந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் "நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அதன் படி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் தொடர்ந்து இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் நாட்டின் மீது எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் தொலைநோக்கு பார்வையை வளர்ப்போம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். ஜனநாயகம் மற்றும் நாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராக எந்த எதிர்க்கட்சியையும் எங்களுடன் அழைத்து ஒன்றாக போராடுவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சி, அண்மையில் நடந்த நாகாலாந்து, மேகாலயா தேர்தலில் 6 சதவீதத்திற்கும் மேலான வாக்குப்பதிவு காரணங்களுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சி அந்தஸ்து வழங்கியது.

பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டும் யுக்தியில் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆளுங்கட்சி கூட்டத்தில் சிலிண்டர் வெடித்து இருவர் பலி.. தெலங்கானாவில் நிகழ்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.