ETV Bharat / bharat

மின்னணு வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு!

author img

By

Published : Apr 7, 2021, 10:01 PM IST

புதுச்சேரி: மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டும், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு
மின்னணு வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டு அவை அனைத்தும் பலத்த காவல் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையிலுள்ள அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தாகூர் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

கல்லூரி வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்லூரிகளில் மூன்று அடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் முகவர்கள் கடுமையான பரிசோதனைக்குப் பின் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரியிலுள்ள 23 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களாக லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரி மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் காரைக்காலிலுள்ள ஐந்து தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையமான அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாகே தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள மகாத்மா காந்தி மேல்நிலைப்பள்ளியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஏனாம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள சிவில் ஸ்டேஷனில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ராணிமேரி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.