ETV Bharat / bharat

இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது வன்முறையா ? - உண்மை உடைத்த நிர்மலா சீதாராமன்!

author img

By

Published : Apr 11, 2023, 4:09 PM IST

இஸ்லாமியர்கள் மீதான வன்முறை நிகழ்த்தப்படுவதாக கருத்து உடையவர்கள் அதை இந்தியா வந்து நிருபித்து காட்டட்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Nirmala Sitaraman
Nirmala Sitaraman

வாஷிங்டன் : இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது அதிக வன்முறை நடத்தப்படுவதாக கருதப்படுவது மேற்கத்திய நாடுகளின் எதிர்மறை கண்ணோட்டம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கருத்தரங்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் பின்னடைவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அது மேற்கத்திய நாடுகளின் தவறான கண்ணோட்டம் என அவர் பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகளவில் அதிக இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்றார். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் கடினமாக மாற்றப்பட்டால் 1947 ஆம் ஆண்டு இருந்ததை விட இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரித்து இருக்குமா என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அண்டை நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதாக அவர் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான சில இஸ்லாமிய குழுக்கள் கூட காணாமல் போய் வருவதாகவும், முஹாஜிர்ஸ், ஷியா உள்ளிட்ட பிரிவுகள் பெரும்பான்மை என கருதப்படுவது இல்லை என்றும் அந்த பிரிவுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதாக அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒவ்வொரு இஸ்லாமியர்களும் தொழில் செய்யவும், அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதாகவும் அவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம் மக்கள் சிறப்பாக வாழ்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதாக கருதுபவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு வந்த ஆய்வு செய்து அதன் பின் தங்கள் கருத்துகளை நிருபிக்கப்பட்டும் என்றார். வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் பின்தங்கி இருப்பதாகவும் இந்திய பொருளாதாரம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், இந்தியா வராத முதலிட்டாளர்களின் கருத்துகளை கேட்பதை விட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை நேரில் வந்து பார்த்து முதலீட்டாளர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : சிபிஐ, திரிணாமுல், என்சிபி தேசிய கட்சி அந்தஸ்து இழப்பு.. ஆம் ஆத்மிக்கு கிடைத்த அங்கீகாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.