ETV Bharat / bharat

திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன நேரம் மாற்றம்!

author img

By

Published : May 25, 2022, 10:29 PM IST

திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசன டோக்கன்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பு தரிசனத்திற்கான நேரம் பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

TTD RELEASED
TTD RELEASED

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசனம் செய்வதற்கான டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தரிசன டோக்கன் பெற்றவர்கள், தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், வரும் 1ஆம் தேதி முதல், பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு தரிசனத்திற்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அறைகள் முன்பதிவு நாளை(மே 26) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணுக்கு 'செயற்கை' பிறப்புறுப்பு, கருப்பை: அரசு மருத்துவர்கள் சாதனை!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.