ETV Bharat / bharat

தெலங்கானாவில் தேசியக்கொடியேற்றிய சில நிமிடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் படுகொலை

author img

By

Published : Aug 16, 2022, 1:02 PM IST

தெலங்கானாவின் கம்மம் பகுதியில் தேசிய கொடியேற்றிய சில நிமிடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் தேசியக்கொடியேற்றிய சில நிமிடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் படுகொலை
தெலங்கானாவில் தேசியக்கொடியேற்றிய சில நிமிடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் படுகொலை

ஹைதராபாத்: தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள தெலடாரூபள்ளி கிராமத்தில் நேற்று (ஆக 15) மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் முக்கிய பிரமுகர் தம்மினேனி கிருஷ்ணய்யா தேசியக்கொடியேற்றினார். அதன் பின் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஆட்டோவில் வந்த 4 பேர் வழிமறித்து, ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணய்யா சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கம்பம் மாவட்டத்திலும், தெலடாரூபள்ளியிலும் கலவரம் வெடித்துள்ளது. இதனால் தெளதாருபள்ளியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சார்வாக்கர், திப்பு சுல்தான் பேனர் சர்ச்சை... சிவமூகாவில் 144 அமல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.