ETV Bharat / bharat

திருப்பதி செல்ல ஆசையா..? அப்போ இன்றைக்கே டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 2:32 PM IST

Tirupathi Deavasthanam Announcement: திருப்பதி ஏழுமலையான் கோயிலின், டிசம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள், இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tirupathi Deavasthanam
திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திர பிரதேசம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலின், டிசம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள், இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் திருப்பதியில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். எனினும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்கின்றனர். திரை பிரபலங்களும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வர்.

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்ச ரத உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, சுவாமி ரத உற்சவ நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை (செப். 25) நடைபெற்றது. முன்னதாக செப்டம்பர் 23ஆம் தேதி (சனிக்கிழமை) சுவாமிக்கு ஹனுமந்த வாகன சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனை அடுத்து ஸ்வர்ண ரத உற்சவம் நடைபெற்றது. வார இறுதி நாட்கள் மற்றும் விழா நாட்களில் பக்தர்கள், 2 அல்லது 3 நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட்டும் முன்கூட்டியே ஆன்லைனில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் டிசம்பர் மாத தரிசனத்திற்கு இன்று முதல் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் குறித்து தேவஸ்தனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும், https://tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று பக்தர்கள் தரிசன டிக்கெட்டை பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள், குறிப்பிட்ட நாளில் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய வரவேற்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Nellai - Chennai Vande Bharat Train : நாட்டில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.