ETV Bharat / bharat

திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?: மூக்கில் விரல் வைக்கும் பக்தர்கள்

author img

By

Published : Nov 6, 2022, 2:30 PM IST

திருப்பதி தேவஸ்தானம் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை, இனியும் செய்யாது என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்ம ரெட்டி தெரிவித்துள்ளார். இதுவரை எந்த அரசாங்கத்திற்கும் பணம் வழங்கியது இல்லை என்றும் தெரிவித்தார்.

Tirumala
Tirumala

திருப்பதி: திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், சொத்து மதிப்பு குறித்து தேவஸ்தான நிர்வாகம் நேற்று(நவ.5) வெள்ளை அறிக்கை வெளியிட்டது.

அதில், "நாட்டில் உள்ள பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், கடந்த செப்டம்பர் மாதம் வரை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 15,938 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகளில் 10,258.37 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் உள்ள தங்க, வைர ஆபரணங்கள், வெள்ளிப்பொருட்கள், வங்கியில் உள்ள ரொக்கம், நிலங்கள், மனைகள் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டால், திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் "TTD DIAL YOUR EO" நிகழ்ச்சியில் பக்தர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் தர்மரெட்டி, "சிலர் தேவஸ்தானம் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், தேவஸ்தான தலைவரும், அலுவலர்களும் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை. இனியும் செய்ய மாட்டார்கள்.

திருப்பதி தேவஸ்தான வரலாற்றில், இதுவரை எந்த அரசாங்கத்திற்கும் பணம் வழங்கப்படவில்லை. எதிர்காலத்திலும் வழங்கப்படாது. மாநில அரசுப்பத்திரங்களில் இதுவரை நாங்கள் முதலீடு செய்தது இல்லை, வட்டி அதிகம் உள்ள தேசிய வங்கிகளில்தான் டெபாசிட் செய்கிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:திருப்பதியில் ஆன்டி-பிராமின் சக்திகள் உள்ளது, தீட்சிதர் சர்ச்சைக்குரிய ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.