ETV Bharat / bharat

மின் துண்டிப்பை கண்டித்து போராட்டம்! பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி!

author img

By

Published : Jul 26, 2023, 4:13 PM IST

Updated : Jul 26, 2023, 5:26 PM IST

பீகாரில் மின் துண்டிப்பை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசாரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வெடித்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

கதிஹர் : பீகாரில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்கரார்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளமுள்ளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் மாநிலம் கதிஹர் மாவட்டத்தில் மின் துண்டிப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்டத்தில் முறையற்ற மின் விநியோகத்தை கண்டித்து பொது மக்கள் பர்சாய் பிளாக் ஆபிஸ் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்ற போலீசார் மீது பொது மக்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் போலீசாரர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கலவரத்தின் இடையே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் முகமது குர்ஷித் என்றும் பசல் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மற்றொருவர் நியாஸ் அலெம் என்றும் சப்பகோட் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் நடத்திய லத்தி தாக்குதலில் அதிகளவிலான அப்பாவி மக்கள் படுகாயம் அடைந்ததாக பொது மக்கள் தெரிவித்து உள்ளனர். அமைதியான நிலையில் நடந்து கொண்டு இருந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏறத்தாழ 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறையற்ற வகையில் மின் விநியோகம் செய்ததால் போராட்டம் நடத்தியதாக பொது மக்கள் தெரிவித்து உள்ள நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 5 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மின் தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க பொது மக்கள் பதறியடித்து ஓடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மேலும் கலவரம் வெடித்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் பழைய நிலையை கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம்.. தப்புமா பாஜக அரசு! நடைமுறை என்ன?

Last Updated :Jul 26, 2023, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.