ETV Bharat / bharat

குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கிறதா!- அதிர்ச்சி ரிப்போர்ட்!

author img

By

Published : May 7, 2022, 12:30 PM IST

இந்திய அளவில் தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் அதிகமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இருக்கும் குழந்தைகளின் வளர்திறன் 38 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், மக்களின் உடல்பருமன் விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கிறதா!- அதிர்ச்சி ரிப்போர்ட்!
குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கிறதா!- அதிர்ச்சி ரிப்போர்ட்!

டெல்லி: இந்திய அளவில் குழந்தைகளின் வளர்ச்சித்திறன் 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைந்துள்ளதாக NFHS(தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு ) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பெரும்பாலான மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்திய அளவில் கடந்த 4 வருடங்களுக்கு பின் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு இதற்கு முன்பு 4 முறை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது 5 வது ஆய்வு அறிக்கையாகும்.

குழந்தைகளின் வளர்ச்சித் திறன் குறைவதற்கு குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் குறைபாடு ஏற்படுதல், அடிக்கடி உடல் நலக் குறைபாடு உண்டாதல் மற்றும் போதுமான உளவியல் தூண்டுதல் இல்லாமை ஆகியவை காரணமாக உள்ளன. இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குழந்தைகளின் வளர்ச்சித்திறன் குறைபாடு விகிதம்;-

எண்இடங்கள் குழந்தைகளின் வளர்ச்சித்திறன் குறைபாடு விகிதம்
1கிராமபுறபகுதிகள்37%
2நகர்ப்புறபகுதிகள்30%
3புதுச்சேரியூனியன் பிரதேசங்களில் குறைந்தபட்சமாக 20%
4மேகாலாயாயூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக 47%
5ஹரியானா, உத்தரகாண்ட்,ராஜஸ்தாண், உத்தரப்பிரதேசம் மற்றும் சிக்கிம்ஒவ்வொரு மாநிலத்திலும் 7%
6ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மணிப்பூர்ஒவ்வொரு மாநிலத்திலும் 6%
7சண்டிகர் மற்றும் பீகார்ஒவ்வொரு மாநிலத்திலும் 5%

மக்களின் பருமன் விகிதமும் நாடு முழுவதும் அதிகரித்துள்தாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் பெண்களில் உடல் பருமன் விகிதம் 21 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்களில் 19 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் கேரளா, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், ஆந்திரப்பிரதேசம், கோவா, சிக்கிம், மணிப்பூர், டெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் மூன்றில் ஒரு பெண் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஆய்வறிக்கையின் சிறப்பு: தேசிய குடும்ப நல ஆய்வு நடத்திய கணக்கெடுப்பானது இந்தியா முழுவதும் 6.37 லட்சம் குடும்பங்களில் நேரிடையாக சென்று நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 707 மாவட்டங்களிலும், 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்பட்டது.7 லட்சத்து 24 ஆயிரத்து 115 பெண்களிடமும், 1லட்சத்து 1 ஆயிரத்து 839 ஆண்களிடமும் மொத்தமாக கணக்கீடு செய்யப்பட்டது.

மேலும் இந்த கணக்கீடுகளின் கீழ் மாநிலங்களின் குழந்தையின்மை குறைபாடும் கணக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 4ஆவது ஆய்வறிக்கையை காட்டிலும் தற்போது மாறியுள்ளது. 2 முதல் 2.2 சதவீதமாக உள்ளது. முக்கியமாக 5 மாநிலங்களில் மட்டுமே குழந்தையின்மை அதிகரித்துக்காணப்படுகிறது அவைகளின் பட்டியல்;-

வரிசை எண்மாநிலம்குழந்தையின்மை விகிதம்
1பிகார்2.98
2மேகாலாயா2.91
3உத்தரப்பிரதேசம்2.35
4ஜார்கண்ட்2026
5மணிப்பூர்2.17

மத்திய சுகாதரத் துறை அமைச்சர் மானுஷ் மண்ட்வியா இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் சுகாதரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை களைய வேண்டும் இல்லையேல் இது மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சேர்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க:கோவோவாக்ஸ் தடுப்பூசியை யார் எல்லாம் செலுத்திக்கொள்ளலாம்? - சீரம் நிறுவனம் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.