ETV Bharat / bharat

கேரளா NIT மாணவர் மரணம்.. மகன் கொல்லப்பட்டதாக தந்தை புகார்!

author img

By

Published : Dec 7, 2022, 12:09 PM IST

கேரளாவின் என்ஐடி கோழிக்கோடு, மெகா பாய்ஸ் விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து ஹைதராபாத்தை சேர்ந்த பிடெக் மாணவர் உயிரிழந்தார். அந்த இடத்தில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் தனது மகனால் எழுதப்பட்டதல்ல என மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளா என்ஐடி கட்டடத்தில் இருந்து விழுந்த மாணவன்; மகன் கொல்லப்பட்டதாக தந்தை குற்றச்சாட்டு
கேரளா என்ஐடி கட்டடத்தில் இருந்து விழுந்த மாணவன்; மகன் கொல்லப்பட்டதாக தந்தை குற்றச்சாட்டு

கோழிக்கோடு: என்ஐடி கோழிக்கோடு மெகா பாய்ஸ் விடுதி கட்டிடத்திலிருந்து திங்கட்கிழமை (டிச.5) ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.டெக் மாணவர் குதித்து உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி, ஜெயநகர், சாய் இந்திரா ரெசிடென்ட்ஸ் காலணியைச் சேர்ந்த சென்னுபதி வெங்கட் நாகேஸ்வர ராவ் மற்றும் சென்னுபதி பாரதி ஆகியோரின் மகனான சென்னுபதி யஷ்வந்த் (20) கோழிக்கோடு என்ஐடியில் பி.டெக் கணினி அறிவியல் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவர் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் ஒன்பதாவது மாடியில் வசித்து வந்த மாணவன் டிச.5 மதியம் 2.30 மணியளவில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். உடனடியாக மாணவரை மீட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாலை 5.30 மணியளவில் மாணவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்த மாணவன் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று காவல்துறைக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை இழந்ததால் மாணவன் தற்கொலை செய்ததாக மாணவனின் தோழர்கள் கூறியுள்ளனர். காவல்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தன் மகனின் மரணம் தற்கொலை அல்ல கொலையாக இருக்கலாம் என்றும், தற்கொலை செய்த இடத்தில் கிடைத்ததாகக் கூறப்படும் கடிதம் தன் மகனால் எழுதப்பட்டதல்ல என்றும் மாணவனின் தந்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ், மாணவனின் தந்தையின் ட்விட்டை ரீட்விட் செய்து தெலங்கானாவைச் சேர்ந்த மாணவனின் தந்தை அளித்துள்ள புகாரை விசாரிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 3-வது மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி.. பதைபதைக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.