ETV Bharat / bharat

கேரளாவில் தொடரும் தெருநாய்களின் தொல்லை; விபத்தில் இளைஞர் பலி

author img

By

Published : Sep 14, 2022, 9:28 PM IST

கேரளாவில் தெரு நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து உள்ள நிலையில் நாய் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை தொடர்கிறது; விபத்தில் இளைஞர் பலி
கேரளாவில் தெருநாய்களின் தொல்லை தொடர்கிறது; விபத்தில் இளைஞர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், திருவனந்தபுரம் நகரில் கடந்த வாரம் நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானதில் தலையில் காயம் அடைந்து சிகிச்சைப்பெற்று வந்த 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.

நெய்யாற்றின்கரை குன்னத்துக்கல் பகுதியைச் சேர்ந்த அஜின் ஏ.எஸ். செப்டெம்பர் 9ஆம் தேதி அருவியோட் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் குறுக்கே தெருநாய் பாய்ந்து விபத்துக்குள்ளானார். அப்போது அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த இளைஞன் இன்று காலை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று சில நாட்களுக்கு முன்னர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் கிளப்பின் ஊழியர் ஸ்ரீனிவாசன், கடந்த சில நாட்களுக்கு முன் இரவு இங்குள்ள தீயணைப்பு நிலைய சாலை வழியாக ஸ்கூட்டரில் சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது தெருநாய்கள் கூட்டத்தால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார். அவர் தனது நண்பருடன் தனது வேலை முடித்து வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு நாய் கூட்டம் அவரை மோசமாகத் தாக்கி, அவரது காலை கடித்துள்ளது.

காயம் கடுமையானது மற்றும் அவருக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அந்த நபர் உடனடியாக பொது மருத்துவமனையில் இருந்து மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். இதுமட்டுமின்றி பாலக்காட்டில் பெண் ஒருவர் தெரு நாய்களால் தாக்கப்பட்டு முகம் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து தெருநாய்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் கேரளாவில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும், நாயினால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.