ETV Bharat / bharat

மத்திய அரசில் ஜூனியர் இன்ஜினியர் வேலை... என்னென்ன பணியிடங்கள்... எவ்வளவு சம்பளம்... முழுவிவரம் உள்ளே...

author img

By

Published : Aug 19, 2022, 1:11 PM IST

பணியாளர் தேர்வாணையம் இளநிலை பொறியாளர் தேர்வை (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவாண்டிட்டி சர்வேயிங் & காண்ட்டிராக்ஸ்) அறிவித்துள்ளதுள்ளது.

staff-selection-commission-recruitment-2022-junior-engineer-posts-apply-online
staff-selection-commission-recruitment-2022-junior-engineer-posts-apply-online

இதுகுறித்து பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் கே நாகராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பணியாளர் தேர்வாணையம் இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவாண்டிட்டி சர்வேயிங் & காண்ட்டிராக்ஸ்) தேர்வு 2022-க்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான தேர்வு பொதுப் போட்டியாக நடத்தவுள்ளது. நாடு முழுவதிலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கான விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை எவ்வாறு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் ஆள் சேர்ப்பு அறிக்கையில் உள்ளன.

தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 02.09.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும். இணையம் வழியாக கட்டணம் செலுத்த 03.09.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும்.

கணினி அடிப்படையிலான தேர்வு 2022 நவம்பரில் நடைபெறும். தென்மண்டலத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 7, புதுச்சேரியில் 1, தெலங்கானாவில் 3 என மொத்தம் 21 மையங்களில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல் பிரிவுகளில் ஒரு டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உள்ளது.

சம்பளம் : ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரையில் வழங்கப்படும்.

இதையும் படிங்க: கடந்த 8 ஆண்டுகளில் ரயில்வேயில் 3.5 லட்சம் பேருக்கு வேலை... அடுத்து?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.