ETV Bharat / bharat

Pariksha pe Charcha: சமூக அழுத்தத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது - பிரதமர் அறிவுரை

author img

By

Published : Jan 27, 2023, 3:41 PM IST

டெல்லியில் நடைபெறும் Pariksha pe Charcha நிகழ்வில், சமூக அழுத்தத்தைப் பெற்றோர், தங்களது குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Pariksha pe Charcha: சமூக அழுத்தத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது - பிரதமர் அறிவுரை
Pariksha pe Charcha: சமூக அழுத்தத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது - பிரதமர் அறிவுரை

டெல்லி: பள்ளி மாணவர்களின் தேர்வு, மன அழுத்தம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்களைப் பற்றி, பிரதமர் மோடி உடன் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ (Pariksha pe Charcha) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இந்நிகழ்ச்சி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 6ஆம் ஆண்டாக நடைபெறும் Pariksha pe Charcha நிகழ்ச்சியில், மாநில பள்ளிகள், சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலாயா, நவோதயா வித்யாலயா மற்றும் பிற பள்ளிகளைச் சேர்ந்த 31.24 லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1.95 லட்சம் பெற்றோர் உள்பட மொத்தம் 38.80 லட்சம் பேர் பங்கேற்றனர்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “சமூக அழுத்தங்களால் தங்களது குழந்தைகள் மீது சில எதிர்பார்ப்புகளை குடும்பத்தினர் வைப்பது வழக்கமாக உள்ளது. இது மிகப்பெரிய பிரச்னை. இது எப்படி நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஏனென்றால், அரசியலில் வெற்றிக்காக பல்வேறு அழுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஆனால் எதிர்பார்ப்புகள் என்பது தகுதியைப் பொறுத்து அமைய வேண்டும். நீங்கள் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும். பெற்றோரின் அதிக அழுத்தத்தால், குழந்தைகள் தவறான வாய்ப்பை கையில் எடுப்பதற்கு வழி உள்ளது. அதேநேரம் குழந்தைகள் தங்களது திறமையை குறைத்து மதிப்பிடக் கூடாது” என்றார்.

இதையும் படிங்க: Pariksha Pe Charcha: தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.