ETV Bharat / bharat

இந்திய சீரம் நிறுவனத்தில் தடுப்பூசி பரிசோதனை தொடரும் - சுகாதார அமைச்சகம்

author img

By

Published : Dec 2, 2020, 10:11 AM IST

Updated : Dec 2, 2020, 10:46 AM IST

டெல்லி: சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் கரோனா தடுப்பூசியால் உடல், மனநல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தடுப்பூசி சோதனையில் பாதகமான விளைவு குறித்த சிக்கல், சோதனையின் காலக்கெடுவை பாதிக்காது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நேற்று (டிச. 01) எனத் தெளிவுப்படுத்தியுள்ளது.

vaccine
vaccine

மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் இது குறித்து பேசுகையில், "இப்போது இது ஒரு நீதிமன்ற வழக்கு. நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் தடுப்பூசி தொடர்பான சோதனை தொடரும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

தன்னார்வலருக்கு தடுப்பூசி கிடைத்த மருத்துவமனையின் நிறுவன நெறிமுறைகள் குழு, தரவு பாதுகாப்பு, கண்காணிப்பு வாரியம் தடுப்பூசி பரிசோதனையின் பாதகமான விளைவுகள் குறித்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரிடம் சமர்ப்பிக்கும்.

ஒரு சோதனை நடைபெறும் போதெல்லாம், தன்னார்வலர் ஒரு ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடப்படுவார். அதில், பாதகமான தாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்கக்கூடும் என்பதையும், தன்னார்வலரின் அனுமதி இல்லாமல், அவரை தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி சோதனை பல தளங்கள், மல்டிசென்ட்ரிக் இடங்களில் நடைபெறுகிறது. தன்னார்வலர்கள் முறையான மருத்துவக் கவனிப்பின்கீழ் தடுப்பூசி பெறுகிறார்கள். இது நிறுவன நெறிமுறைகள் குழுவால் (ஐஇசி) கண்காணிக்கப்படுகிறது. பாதகமான விளைவு ஏற்பட்டால், படிவம் 5இன்படி, இந்த விஷயத்தை முறையாகப் பரிசோதித்த பின்னர் முதன்மைப் புலனாய்வாளரால் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு (டிசிஜிஐ) சமர்ப்பிக்க வேண்டும்.

ஐஇசி மற்றும் டிஎஸ்எம்பியிடமிருந்து அறிக்கையைப் பெற்ற பிறகு, டிசிஜிஐ அத்தகைய தடுப்பூசி சோதனைக்கு இறுதி முடிவை எடுக்கிறது. தடுப்பூசி மற்றும் பாதகமான விளைவுகளுக்கு இடையேயான நேரடி தொடர்பைக் கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டாளர் முயற்சிப்பார். இருப்பினும், சோதனையை நிறுத்த வேண்டிய அவசியமில்லை“ என்று தெரிவித்தார்.

மேலும், பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதற்காகவே அந்த தன்னார்வலர் இவ்வாறு செயல்படுவதாகத் தெரிகிறது. எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளை சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா மறுப்பதோடு, அவரிடம் ரூ.100 கோடி அளவுக்கு நஷ்ட ஈடு கேட்க இருப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

சீரம் நிறுவனம் 2, 3ஆம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத் வரும் நிலையில் பாரத் பயோடெக் தனது தடுப்பூசி தன்னார்வலரின் 3ஆம் கட்ட சோதனையையும் நடத்திவருகிறது என்றும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாரத் பயோடெக் சோதனை நடவடிக்கைகளின் போது இதேபோன்ற பாதகமான தாக்கம் ஏற்பட்டது எனவும் ஒரு தடுப்பூசி கிடைத்தப் பின்னர் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திங்களன்று கூறியதை இங்கு குறிப்பிடலாம் என பூஷண் கூறினார்.

இதற்கிடையில், நவம்பர் மாதத்தில் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 10 லட்சத்து 55 ஆயிரத்து 386 பேருக்கு சோதனைகளை நடத்தப்பட்டுள்ளன. இதேபோல், 43 ஆயிரத்து 152 பேருக்கு புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சராசரியாக 47 ஆயிரத்து 159 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு ஆறாயிரத்து 857 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகிலேயே மிகக் குறைவு. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

Last Updated : Dec 2, 2020, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.