ETV Bharat / bharat

கர்நாடகாவில் பள்ளிகளில் தினமும் தியான வகுப்புகள் நடத்த உத்தரவு!

author img

By

Published : Nov 3, 2022, 4:59 PM IST

கர்நாடகாவில் அனைத்துவித பள்ளிகளிலும் தினமும் தியான வகுப்புகள் நடத்த அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி. நாகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

school
school

பெங்களூரு: கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி. நாகேஷ் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தியானத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் கவனம், ஆரோக்கியம், நேர்மறை சிந்தனை, ஆளுமைத்திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த, தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்ய அறிவுறுத்த வேண்டும் என்றும், அதற்குத்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் கல்வி கற்கவும், நல்ல குணங்களை மேம்படுத்திக்கொள்ளவும், தியானம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சில பள்ளிகளில் தியான வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் இதை அமல்படுத்த வேண்டும் என மாநில தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை விடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಲ್ಲಿ ಏಕಾಗ್ರತೆ ಹೆಚ್ಚಿಸಲು, ಆರೋಗ್ಯ ವೃದ್ಧಿಸಲು, ಸದ್ವಿಚಾರ ಚಿಂತನೆ, ಒತ್ತಡಗಳಿಂದ ಮುಕ್ತವಾಗಿ ಜ್ಞಾನಾರ್ಜನೆ, ಉತ್ತಮ ಗುಣಗಳನ್ನು ರೂಢಿಸಿಕೊಳ್ಳುವ ಮೂಲಕ ವ್ಯಕ್ತಿತ್ವ ವಿಕಸನಕ್ಕಾಗಿ ಶಾಲೆಗಳು & ಪದವಿಪೂರ್ವ ಕಾಲೇಜುಗಳಲ್ಲಿ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಪ್ರತಿನಿತ್ಯ 10 ನಿಮಿಷ ಧ್ಯಾನ ಮಾಡಿಸಲು ಅಗತ್ಯ ಕ್ರಮ ಕೈಗೊಳ್ಳಲು ಸೂಚಿಸಲಾಗಿದೆ. pic.twitter.com/j7lVJYr65B

    — B.C Nagesh (@BCNagesh_bjp) November 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ரேகிங் செய்த கால்நடை பல்கலைக்கழக மாணவர்கள் 34 பேர் சஸ்பெண்ட்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.