ETV Bharat / bharat

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 1:46 PM IST

Minister Senthil Balaji bail case: சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று (அக். 30) மனு விசாரணைக்கு வந்த போது வழக்கை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

sc-orders-adjournment-of-hearing-on-minister-senthil-balaji-bail-plea
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் சென்னை உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உடல்நிலை காரணம் கூறி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (அக்.30) உச்ச நீதிமன்ற நீதிபதி திரிவேதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.