ETV Bharat / bharat

படங்களில் இருந்து விலகி, வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யும் சமந்தா!

author img

By

Published : Jul 16, 2023, 10:06 PM IST

சிறிது காலம் படங்களில் இருந்து விலகி, உடல் நலனை குணப்படுத்தும் பயணத்தை மேற்கொண்டுள்ளார், நடிகை சமந்தா. அதுகுறித்து இங்கே காண்போம்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: நடிகை சமந்தா ரூத் பிரபு சிறிது காலம் படங்களில் இருந்து விலகியுள்ளார். ஆனால், அவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்காக தனது திரைப் பணிகளை சற்று மூட்டைக்கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 15) சமந்தா தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 16), சமந்தா தனது உடல் நலனை குணப்படுத்தும் பயணத்தைப் (healing journey) பற்றி தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் ஸ்டோரியாக (Instagram Stories) பதிவிட்டுள்ளார். மேலும், சமந்தா தற்போது கோயம்புத்தூரில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சமந்தா ஈஷா அறக்கட்டளையின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, வெள்ளை நிற இதய ஈமோஜியோடு "மகிழ்ச்சியான இடம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், ஆன்மிக அமைப்பை டேக் (geotagged the spiritual organisation) செய்துள்ளார். ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரான ஆன்மிகவாதியுமான சத்குருவின் அபிமானியானவர், நடிகை சமந்தா. அவர் அடிக்கடி ஈஷா அறக்கட்டளை நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன் சமூக ஊடகங்களில் சத்குருவின் தத்துவப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் 36 வயதான நடிகை சமந்தா, சிறிது காலம் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக செய்திகளை வெளியிட்டுள்ளார் என்று செய்திகள் பரவின. சமந்தா இதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தபோது, ​​அவரது சிகையலங்கார நிபுணர் (hair stylist) ரோஹித் பட்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தற்போது தனது உடல் நலனை குணப்படுத்தும் பயணத்தில் ஈடுபட்டுள்ள சமந்தா எப்போதும் இருக்கும் வலிமையை விட இன்னும் வலிமையாக திரும்பி வர வேண்டும்" என்ற பதிவின் மூலம் சமந்தாவின் சினிமா இடைவெளியை உறுதிப்படுத்தினார்.

சமந்தாவுக்கு கடந்த ஆண்டு மயோசிடிஸ் (Myositis) நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவர் தன்னுடல் தாக்க நிலை (autoimmune condition) போன்ற பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: ஹீரோவாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி.. நடிகர் ரோபோ சங்கரின் உடல்நிலை உள்ளிட்ட சினிமா அப்டேட்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.