ETV Bharat / bharat

பசுமை நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.7 லட்சம் கோடி - நிதின் கட்கரி

author img

By

Published : Mar 24, 2021, 7:20 PM IST

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பசுமை வழியில் நிறைவேற்ற இதுவரை ஏழு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Gadkari
Gadkari

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பசுமை உள் கட்டுமானம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். அதில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை பசுமை கட்டுமானத்தில் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.

அப்போது கட்கரி, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 111 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தேசிய உள்கட்டமைப்புச் செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் பசுமையை அடிப்படையாகக் கொண்டு சேதாரமற்ற வளர்ச்சி என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுவருகிறது.

இதுவரை மட்டும் ஏழு லட்சம் கோடி ரூபாய் தொகை பசுமை நெடுஞ்சாலைக் கட்டுமானத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாகச் சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள டெல்லியில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பாதிப்பை குறைக்க செலவழிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் மூலம் காற்று மாசு, வாகன நெரிசல், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட சிக்கல்கள் ஒழுங்குப்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிசான் நிறுவன வாகன விலை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.