ETV Bharat / bharat

விவாதம் இன்றி நிறைவேறியது சிறுவர் நீதி சட்டத்திருத்த மசோதா 2021

author img

By

Published : Jul 28, 2021, 8:30 PM IST

எதிர்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில், சிறுவர் நீதி (குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு) சட்டத்திருத்த மசோதா 2021 விவாதமின்றி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.நாட்டில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த மசோதா முக்கிய நோக்கம் என பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி தெரிவித்தார்.

அமைச்சர் ஸ்மிதி இராணி
அமைச்சர் ஸ்மிதி இராணி

டெல்லி: சிறுவர் நீதி (குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு) சட்டத்திருத்த மசோதா 2021, எதிர் கட்சிகளின் அமளிகளுக்கிடையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அம்மசோதா குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி மாநிலங்கள் அவையில் பேசியதாவது:

'இந்த சட்டத்திருத்த மசோதா, நாட்டில் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. சிறுவர் நீதி மசோதா குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் என கருதப்பட்டது. பின்னர் அதில் சிக்கல்கள் எழுந்தன. குழந்தையைத் தத்தெடுக்கும் போது அதற்கான ஆவணப் பணிகள் முடிவடைய நீண்ட நாட்கள் எடுக்கின்றன; அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம் குழந்தைகள் நலக் குழு, மாவட்ட நீதிபதிக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

மக்கள் குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் உறுப்பினர்கள் தகுதிக்கான அளவுகோல்களை நாங்கள் நிர்ணயம் செய்துள்ளோம். தனிநபர் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டவர், தார்மீக அடிப்படையில் குற்றச்செயல்களுக்காக தண்டனை பெற்றவர், குழந்தைகள் நலனைச் சுரண்டுபவர்கள், குழந்தைகளைப் பணியில் அமர்த்தியிருப்பவர்கள் போன்றவர்கள் குழந்தைகள் நலக் குழுவில் உறுபினராக இருக்க முடியாது என்ற அமைச்சர், பெற்றோருக்கிடையில் மோதல் உருவான பின்னர் அவர்களின் குழந்தையை, குழந்தைகள் நலக்குழு தத்தெடுத்துக் கொண்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கையும் சுட்டிக்காட்டி பேசினார். தொடர்ந்து இம்மசோதா மூலம், மாவட்ட நீதிபதி, சிறுவர் நீதி வாரியம், குழந்தைகள் நலக் குழு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர்களின் அமலிகளுக்கு இடையில் தொடர்ந்து பேசிய அமைச்சர் இராணி, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பிரச்னைகள் கவனம் ஈர்க்கப்பட கூடியாதவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இந்தநிலையில், நாட்டின் குழந்தைகளின் நலனும் நம்முடைய கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது என்ற அமைச்சர், குழந்தைகள் நலப்பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டினார். குழந்தைகள் நலப் பிரச்னைக்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் ரூ. 60 கோடி கடந்த 2009 - 10ஆம் ஆண்டில் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்

அப்போது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஃபவுசியா கான், இந்த மசோதா நாட்டின் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கலாம். ஆனால் தற்போது நாட்டிற்கே பாதுகாப்பு தேவையாக உள்ளது என்று கூறியவர், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ், வேளாண்திருத்தச் சட்டங்கள், கோவிட் 19 பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. சில உறுப்பினர்கள், பிக் பிரதர் கவனிக்கிறார், ஓட்டுக்கேட்பதை நிறுத்துங்கள், நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல போன்ற பதாகைகளை வைத்திருந்தனர்.

இதையும் படிங்க: வங்கி திவாலான 90 நாள்களுக்குள் 5 லட்ச ரூபாய் காப்பீடு - நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.