ETV Bharat / bharat

Miss Earth India 2023 பட்டத்தை வென்றார் ராஜஸ்தானைச் சேர்ந்த ப்ரியன் செய்ன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 7:40 PM IST

Priyan Sain won Miss Earth India 2023 title: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ப்ரியன் செய்ன் டெல்லியில் நடைபெற்ற மிஸ் எர்த் இந்தியா 2023 போட்டியில் அழகி பட்டம் வென்றார்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: மிஸ் ராஜஸ்தான் உலக அழகி போட்டி 2022இல் இரண்டாவது பரிசு பெற்ற ப்ரியன் செய்ன் (Priyan Sain), மிஸ் எர்த் இந்தியா 2023 பட்டத்தை வென்று உள்ளார். இவர், அடுத்ததாக வியட்நாம் நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கவுள்ளார்.

மிஸ் இந்தியா 2023 போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான பணிகளை தீபக் அகர்வால் மேற்கொண்டார். 16 பேர் பங்கேற்ற மிஸ் இந்தியா போட்டியில் ப்ரியன் சென் வெற்றி பெற்றார். ப்ரியன் மிஸ் இந்தியா 2023 போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது ப்ரியன் செய்ன் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றதன் பலனாக வியட்நாமில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதன் மூலம் உலக அரங்கில் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக மிஸ் ராஜஸ்தான் போட்டியில் பங்கேற்ற ப்ரியன் அதில் இரண்டாம் பரிசை பெற்றதாக மிஸ் ராஜஸ்தான் போட்டி ஏற்பாட்டாளர் யோகேஷ் மிஷ்ரா கூறினார்.

ப்ரியனின் தாயார் ராஜஸ்தான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ப்ரியன் சிறுவயது முதல் தன்னை டாம்பாயாக நினைத்துக் கொண்டு படிப்போடு சேர்த்து இத்தகைய சாதனையை புரிந்துள்ளார். மேலும், மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பதன் மூலம் உலக அழகி போட்டியில் இந்தியாவிலிருந்து பல பேர் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க: Reliance AGM: ரிலையன்ஸ் வாரியத்தில் இருந்து நீதா அம்பானி விலகல்: வாரிசுகளுக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.