ETV Bharat / bharat

சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல்காந்தி!

author img

By ANI

Published : Sep 21, 2023, 9:56 PM IST

Rahul Gandhi hears grievances of porters: டெல்லியில் உள்ள ஆனந்த விஹார் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (செப்.21) சுமை தூக்கும் தொழிலாளிகளை சந்தித்தார். பின் அவர்களுடைய சிவப்பு நிற உடையை அணிந்து தலையைில் பொருட்களை சுமந்து சுமை தூக்கும் தொழிலாளிகளின் அனுபவத்தை பெற்றார்.

rahul-gandhi-with-porters-at-anand-vihar-railway-station
ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளிகளுடன் தலையைில் பொருட்களை சுமந்து சென்ற ராகுல்காந்தி

சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல்காந்தி

டெல்லி: டெல்லியில் உள்ள ஆனந்த விஹார் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (செப்.21) சுமை தூக்கும் தொழிலாளர்களைச் சந்தித்தார். பின் அவர்களுடைய சிவப்பு நிற உடையை அணிந்து தலையைில் பொருட்களை தலையில் சுமந்து, சுமை தூக்கும் தொழிலாளிகளின் அனுபவத்தைப் பெற்றார்.

ராகுல் காந்தி, சுமை தூக்கும் தொழிலாளிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். ராகுல் காந்தி தலையில் பொருட்களை சுமந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில் ராகுல் காந்தி தலையில் பொருட்களை சுமந்து செல்லும் காட்சிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் கையில் கட்டியிருக்கும் பேட்ஜை தனது கையில் கட்டுவது போன்ற வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின், சுமை தூக்கும் தொழிலாளிகள், ’ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என்று மகிழ்ச்சியில் முழக்கங்களை எழுப்பினர்.

ஆனந்த விஹார் ரயில் நிலையத்திற்கு 53 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அன்றாட வாழ்வில் சுமை தூக்கும் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றில் ராகுல் காந்தி மக்களின் ஹீரோ என்றும், அவர் உழைப்பாளிகளின் கவலைகளை காது கொடுத்து கேட்பார் என்று குறிப்பிட்டுள்ளன.

  • Today, Shri @RahulGandhi ji met the railway porters at Anand Vihar.

    He saluted their service to our railways and nation, as they bear the weight of millions daily.

    He also listened to their issues and dreams as part of Bharat Jodo. pic.twitter.com/YaBPFntKP6

    — Srinivas BV (@srinivasiyc) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி, ரயில் நிலையத்தில் ராகுல் காந்தி பொருட்களை சுமந்து செல்லும் காட்சிகளை பகிர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் 1983ஆம் ஆண்டு வெளியான மஸ்தூர் திரைப்படத்தின் "ஹம் மெஹ்னட்காஷ் இஸ் துனியா சே" பாடலுடன் அவர் இடுகையுடன் "மக்கள் ஹீரோ" என்று தலைப்பிட்டார்.

ராகுல் காந்தி தனது பயணத்தில் பல்வேறு நபர்களைச் சந்தித்து வருகிறார். இதற்கு முன் பெங்களூருவில் டெலிவரி தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வேலை பற்றி கேட்டு அறிந்து, அவர்களுடன் இரு சக்கர வாகத்தை ஓட்டிச் சென்றார். மேலும் டெல்லியிலுள்ள ஆசாத்பூர் மண்டிக்குச் சென்று அங்கு உள்ள விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து ராகுல் காந்தி மக்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி "பாரத் ஜோடோ யாத்ரா" செல்லும்போது இது போன்று பல்வேறு நபர்களைச் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் நிறைகளை கேட்டு அறிந்து சென்று வருவது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் தொடரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.