ETV Bharat / bharat

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்

author img

By

Published : Feb 12, 2022, 4:44 PM IST

நாட்டின் முன்னணி தொழிலதிபரான ராகுல் பஜாஜ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Rahul Bajaj
Rahul Bajaj

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான ராகுல் பஜாஜ் இன்று காலமானார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயர் பிரிந்ததாக பஜாஜ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 வயதான ராகுல் பஜாஜ் நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை வென்றுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருக்கு ராஜீவ் பஜாஜ், சஞ்சீவ் பஜாஜ் என இரு மகன்களும், சுனைனா என்ற மகளும் உள்ளனர்.

உடல் நலனைக் காரணம் காட்டி பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ் கடந்தாண்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரு சிறிய கிராம்பில் இவ்வளவு நன்மைகளா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.