ETV Bharat / bharat

"டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கு பாராட்டு" - மனதின் குரல் நிகழ்ச்சியில் மனம் திறந்த பிரதமர் மோடி!

author img

By

Published : Feb 26, 2023, 1:51 PM IST

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் டிஜிட்டல் துறைகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பாராட்டினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் பிரதமர் மோடி மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசினார். இது அவரது 98-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். விரைவில் 100வது நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தரப்பில் திட்டமிட்டுள்ளது.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்திய தயாரிப்பு விளையாட்டு பொருட்களுக்கு சர்வதேச அளவில் தேவை ஏற்பட்டுள்ளதாக கூறினார். உள்நாட்டை காட்டிலும் வெளிநாடுகளில் இந்திய விளையாட்டு பொருட்களின் தேவை பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பாராட்டினார். ஈ-சஞ்சீவனி திட்டத்தை எடுத்துக்காட்டாக கூறிய பிரதமர் மோடி, மருத்துவர்களுடனான டெலி கன்சல்டேசன் எனப்படும் தொலை ஆலோசனையில் ஈடுபட இது முக்கிய கருவியாக மாறி உள்ளதாக கூறினார்.

நாட்டின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இந்த தொலை ஆலோசனை கருவி மூலம் மருத்துவர்களுடன் கலந்துரையாட முடியும் என்றும் அதற்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் வழிவகுத்து கொடுத்து உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்திலும் டிஜிட்டல் இந்தியா திட்ட முயற்சிகளின் தாக்கத்தை காண முடிவதாக தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். யுபிஐ பணபரிமாற்ற முறையில் பல்வேறு நாடுகள் ஆர்வமாக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து UPI-Pay என்ற இணைப்பை தொடங்கி உள்ளதாக கூறினார்.

இதன் மூலம் இரு நாட்டு மக்களும் எளிதாக பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்றும் இத்தகைய திட்டங்கள் எளிமையான வாழ்க்கைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவின் தனி பண்புகள் குறித்து கடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் கதைகளாக பேசிய நிலையில் தற்போது அதன் புகழ் தொலைதூரத்திற்கு பரவி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தன்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் 3 போட்டிகளை பற்றி பேசியதாக கூறிய அவர், அந்த போட்டிகள், பாடல்களுடன் தொடர்பு கொண்டவைகளாக இருந்தாக கூறினார். அந்த பாடல்கள் நாட்டுப்பற்று பாடல்கள், தாலாட்டு மற்றும் ரங்கோலி போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்ததாக பிரதமர் மோடி கூறினார்.

இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் குறைந்தால் இதைச் செய்யுங்க.. சூப்பர் டிப்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.