ETV Bharat / bharat

கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

author img

By

Published : May 13, 2023, 11:02 PM IST

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றவும் வாழ்த்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: நாடெங்கும் உள்ளவர்கள் உற்றுநோக்கிய கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று (மே.13) வெளியாகின. வரும் 2024 மத்தியில் ஆளும் பாஜகவும், அகில இந்திய காங்கிரஸுக்கும் இந்த தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் வெற்றி காங்கிரஸிற்கே தீர்மானிக்கப்பட்டது என்பதை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் தெரியவந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் இதுவரை இல்லாத இமாலய வெற்றியை கர்நாடக காங்கிரஸ் பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது.

கர்நாடக தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் இதுவரையில் காங்கிரஸ் 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமான இடங்களில் அதிகமான வாக்குகள் பெற்று காங்கிரஸ் சாதனை பெற்றுள்ளது. தற்போது இந்த தேர்தலில் பெற்ற வாக்குகளின் படி, முந்தைய 43 சதவீதத்தைக் கடந்து 43.7 சதவீத வாக்குகளுடன் தனது பலத்தை காட்டியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் இமாலய வெற்றிபெற்ற காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பிற அரசியல் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். "பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் ComeBack கொடுத்த தொகுதி! எது தெரியுமா?

இந்த நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகளின் மூலம் முரட்டுத்தனமான சர்வாதிகார அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான முடிவை வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது வணக்கங்கள். முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது. பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும்போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு மைய வடிவமைப்பும் அவர்களின் தன்னிச்சையை அடக்கிவிட முடியாது என்பது தான் இந்த முடிவுகளின் மூலம் கிடைத்துள்ள பாடம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இதையும் படிங்க: திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி

இந்த தேர்தலில் கர்நாடக மக்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த டிவிட்டர் பதிவில், "கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக காரியகர்த்தாக்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Karnataka Result Live Update:'கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்' - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.