ETV Bharat / bharat

கிழக்கு லடாக்கில் சீனாவின் ஊடுருவல் - ஜி7 மாநாட்டில் உண்மையை உடைத்த பிரதமர் மோடி!

author img

By

Published : May 21, 2023, 1:09 PM IST

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ஊடுருவல்களால் பிராந்திய ஒருமைப்பாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.

Modi
Modi

ஹிரோசிமா : உலகின் தற்போதைய நிலையை மாற்றும் ஒரு தலைபட்சமான முடிவுகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். ஜப்பான் சென்று உள்ள பிரதமர் மோடி, அணுஆயுத நகரான ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, "உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழல் மனிதநேயம் மற்றும் மனிதாபிமான எண்ணங்களுக்கு எதிரான பிரச்னையே தவிர, அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கானது இல்லை’’ என்று கூறினார். இரு தரப்பு பேச்சுவார்த்தையே போர் நிறுத்தம் மற்றும் அமைதியான சூழல் உருவாவதற்கான ஒரே வழி என்று பிரதமர் மோடி கூறினார்.

உலக நாடுகள், ஐ.நா.வின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளித்து, தற்போதைய சூழலை மாற்றும் ஒரு தலைபட்சமான முடிவுகளுக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பிராந்திய ஒருமைப்பாடு குறித்து பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து தெரிவித்தார். தொடர்ந்து ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழலை அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்ததாக கருதவில்லை என்றும், மனிதநேயம் மற்றும் மனிதாபிமான மதிப்புகளுக்கு எதிரான பிரச்னை என்று நம்புவதாக கூறினார்.

போரின் தொடக்கம் முதலே இரு தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான உரையாடல்களே பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி எனக் கூறி வருவதாகவும், ரஷ்யா - உக்ரைன் பிரச்னையைத் தீர்க்க இந்தியாவால் என்ன செய்ய முடியுமோ அதை கட்டாயம் செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் எத்தகைய பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் என்பதை இந்தியா தொடக்கம் முதலே ஆதரித்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் உணவு, எரிபொருள், உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் வளரும் நாடுகளால் உணரப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் என்பது அனைத்து நாடுகளின் பொதுவான நோக்கமாக இருப்பதாகவும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், ஏதாவது ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் அனைத்து நாடுகளையும் பாதிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிலும் குறைந்த வளங்களைக் கொண்ட வளரும் நாடுகள் மிகவும் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலையின் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் உர நெருக்கடியின் அதிகபட்ச விளைவுகள் வளரும் நாடுகளை வெகுவாக பாதிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க : Bakhmut : "உக்ரைன் பக்முத் நகரை கைப்பற்றிவிட்டோம்" - ரஷ்யா பாதுகாப்புத் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.