ETV Bharat / bharat

விதிகளை மீறி கூட்டுப் பிரார்த்தனை: மதப்போதகர்கள் 100 பேருக்கு கரோனா

author img

By

Published : May 5, 2021, 6:39 PM IST

Updated : May 6, 2021, 1:02 AM IST

திருவனந்தபுரம்: கரோனா காரணமாக கேரள அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ள நிலையில், விதிகளை மீறி சிஎஸ்ஐ ஆலயத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தால் 100க்கும் மேற்பட்ட மதப்போதகர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இருவர் உயிரிழந்துள்ளனர்.

விதிகளை மீறி கூட்டுப் பிரார்த்தனை: மதப்போதகர்கள் 100 பேருக்கு கரோனா
விதிகளை மீறி கூட்டுப் பிரார்த்தனை: மதப்போதகர்கள் 100 பேருக்கு கரோனா

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறி சிஎஸ்ஐ ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனைக் கூட்டம் நடந்ததாக தலைமை அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆயர் உள்பட 480 மதபோதகர்கள் கலந்துகொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, இடுக்கியில் அமைந்துள்ள மூணாறில் அந்தப் பிரார்த்தனைக் கூட்டம் ஏப்ரல் 13 முதல் 17ஆம் தேதிவரை நடந்துள்ளது. இதில் கலந்துகொண்ட மதபோதகர்கள் முறையாக தகுந்த இடைவெளியைப் பின்பற்றவில்லை என்றும், முகக்கவசம் அணியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மதபோதகர்கள் பிஜூமோன் (52). சைன் பி ராஜ் (43) ஆகியோர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து, அதில் கலந்துகொண்ட ஆயர் தர்மராஜ் ராசலம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியினர் கரோனா அச்சத்தில் உள்ளனர். கரோனா போன்ற பெருந்தொற்று பரவும் நிலையில், மதப்போதகர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பரவல்: ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்-மருத்துவமனையின் நடவடிக்கைள் என்ன?

Last Updated : May 6, 2021, 1:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.