ETV Bharat / bharat

150 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது

author img

By

Published : Mar 2, 2022, 10:31 AM IST

புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து சுமார் 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Police arrested a youth in Pondicherry  youth arrested or selling cannabis  cannabis selling  cannabis  cannabis seized in puducherry  கஞ்சா பறிமுதல்  புதுச்சேரியில் கஞ்சா பறிமுதல்  கஞ்சா விற்ற இளைஞர் கைது  புதுச்சேரியில் இளைஞர் கைது
கஞ்சா பறிமுதல்

புதுச்சேரி: கொத்தபுரிநத்தம்-சன்யாசிகுப்பம் சாலையில், நேற்று முந்தினம் (பிப். 28) திருபுவனை காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் காவலர்களை கண்டதும் ஓடியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் இளைஞரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், அவர், பெரிய காலாப்பட்டு சுனாமி கோட்ரஸ் பகுதியில் குடியிருக்கும் பிரதீப் என்கிற சுகன் ராஜ் வயது (28) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதீப்பை கைது செய்த காவலர்கள், அவரிடமிருந்து சுமார் 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் பிரதீப்பிடம், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற Zomato ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.