ETV Bharat / bharat

ஜி20 மாநாட்டால் பாமர மக்களுக்கு என்ன பயன்? - லாலு கேள்வி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 6:47 PM IST

Lalu Prasad Yadav: ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டின் மூலம், நாட்டின் சாதாரண மக்களுக்கு என்ன பலன் கிட்டியது என்று லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Lalu prasad yadav
Lalu prasad yadav

தியோகர்: நாட்டு மக்களை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே வஞ்சித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் தேர்தலில் தோல்வி அடைந்து வெளியேறுவது உறுதி என்று ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ரயில்வேத் துறை அமைச்சருமான லாலு பிரசாத் தெரிவித்து உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சென்று உள்ள ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அங்கு பாபா பைத்யநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தியோகர் நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது, நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் நிகழ்வுகள், நாட்டின் நலனுக்கு உகந்ததாக இல்லை. பணவீக்க விகிதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை, எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக அமைந்து உள்ளன. நாட்டு மக்கள், பசி, பட்டினி நிகழ்வுகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி, மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில், பிரதமர் மோடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அவர் வெளியேற்றப்படுவது உறுதி.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, 200 ரூபாய் குறைப்பதாக அறிவித்து உள்ளார். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை ஆகும்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை கருத்தில் கொண்டே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. சட்டமேதை பாபாசாகிப் பீமாராவ் அம்பேத்கரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடந்து முடிந்து உள்ள ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு, போலித்தனமான நிகழ்வு என்றும், இந்த நிகழ்வின் மூலம், நாட்டு மக்களுக்கு எந்தவொரு பலனும் கிட்டவில்லை.

28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகி உள்ள I.N.D.I.A கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், செப்டம்பர் 13ஆம் தேதி, தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கூட்டணியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா - சவுதி அரேபியா இடையே உறுதியான உறவு.. இரு நாட்டு தலைவர்கள் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.