ETV Bharat / bharat

சந்திரயான் 3 வெற்றி 140 கோடி மக்களின் வெற்றி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 7:16 PM IST

Updated : Aug 23, 2023, 7:30 PM IST

PM Modi about India is on the Moon: சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட பின், தனது கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியினை அசைத்து தனது மகிழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார்.

india-is-now-on-the-moon-said-pm-modi-hails-chandrayaan-3-landing-on-lunar-surface
india-is-now-on-the-moon-said-pm-modi-hails-chandrayaan-3-landing-on-lunar-surface

ஹைதராபாத்: சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக தென்னாப்ரிக்கா சென்று இருந்த நிலையில், அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி கானொலி காட்சி மூலமாக மக்களிடம் உரையாற்றினார்.

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜீலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. உலக அளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட முதல் விண்கலம் சந்திரயான் 3 ஆகும். சந்திரயான் 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணித்து நிலவை சென்றடைந்துள்ளது. நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை உள்ளிட்ட ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்கிறது. மின்னுாட்டம், நிலநடுக்க அதிர்வுகள், தட்ப வெப்பநிலை குறித்தும் லேண்டர், ரோவர் ஆய்வு மேற்கொள்ளும்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்ரிக்காவில் இருந்து கானொளி மூலம் சந்திரயான்-3 தரையிறங்கும் காட்சியைப் பார்வையிட்டார். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட பின், தனது கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியினை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், இந்தியா வரலாறு படைத்துள்ளது. உலகெங்கும் இந்தியாவின் வெற்றி எதிரொலித்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி 140 கோடி மக்களின் வெற்றி. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று புதிய இந்தியா உருவாகியுள்ளது. இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது.

இந்தியாவின் காலடி நிலவில் பதிந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகமடைய வைத்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் பெருமிதம் பொங்குகிறது. நிலவின் தென்பகுதியை அடைந்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் வருங்கால வளர்ச்சியின் உதயமாக இச்சாதனை இருக்கும். சந்திரயான் 3 விண்கலத்திதை உருவாக்கிய சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் என கூறினார்.

மேலும் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் சந்திரயான்-3 விண்கலம் "நான் எனது இடத்தினை வந்து அடைந்துவிட்டேன் நிங்களும் தான்" என குறுஞ்செய்தி அனுப்பியள்ளது என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: India on Moon: நிலவைத் தொட்டது சந்திரயான் 3 லேண்டர் விக்ரம்!

Last Updated : Aug 23, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.