ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை நிகழ்வு - பிரதமர் மோடிக்கு அழைப்பு

author img

By

Published : Jul 26, 2023, 12:05 PM IST

ஜனவரி 15 முதல் 24 வரை அயோத்தியில் நடைபெரும் ராமர் கோயிலின் 'பிரான்-பிரதிஷ்டா' நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Pran Pratishtha
பிரான்-பிரதிஷ்டா

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் ராம் லல்லா சிலை நிறுவப்படும் நிகழ்வு வருகிற 2024 ஜனவரி 15 முதல் 24 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், 'பிரான்-பிரதிஷ்தா' (சிலை பிரதிஷ்டை செய்தல்) விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவினர் சார்பில் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், "இந்த நிகழ்ச்சிக்கான கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியின்போது, இந்த இடத்தில் ஒரே நேரத்தில் 10,000 பிரமுகர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஜனவரி 15ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 'பிரான்-பிரதிஷ்தா' விழாவை அறிவிக்கும் அறிவிப்பு வாசகங்கள் நாடு முழுவதும் வைக்கப்படுகின்றன. பிரதமர் மோடிக்கு மிகவும் பிஸியான கால அட்டவணையில் இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவரது வருகை அயோத்திக்கு சிறப்பு அங்கீகாரத்தை அளிக்கும் மற்றும் உலகத்தின் முன் நாட்டின் மரியாதையையும் இதனால் அதிகரிக்கும். தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக 'பிரான்-பிரதிஷ்தா' ஏற்பாட்டுக் குழு வளாகத்தில் சுமார் 10,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யக் கூடிய இடத்தைத் தேடி வருகிறோம்.

இது தவிர, நிகழ்ச்சிக்கு முன்னதாக வளாகத்தை சுத்தமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, இந்துக்களின் நம்பிக்கையின் மையமான அயோத்தியில் 'பிரான்-பிரதிஷ்தா' விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் அறியும்" என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கோயிலின் நுழைவாயிலில் 2 சிங்கங்கள், 2 யானைகள் மற்றும் 1 கருடன் 'பிரான்-பிரதிஷ்தா' ஏற்பாட்டுக் குழு வளாகத்தில் சுமார் 10,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யக்கூடிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

கோயிலின் நுழைவாயிலில் 2 சிங்கங்கள், 2 யானைகள் மற்றும் ஒரு கருடன் (தெய்வீக கழுகு போன்ற சூரிய பறவை) மற்றும் அனுமன் சிலைகள் போன்றவை நிறுவப்படும். அதற்கான சிலைகள் தேர்வு செய்யும் பணி அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்.. இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.